Aran Sei

ஜாலியன்வாலா பாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் போராட்டம் – ஒன்றிய அரசு வரலாற்றைத் திரிப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

ஜாலியன்வாலா பாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஜாலியன்வாலா பாக் நினைவிட புதிப்பிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில், நினைவிடம் புதுப்பிக்கப்பட்டதன் வழியாக ஒன்றிய அரசு வரலாற்றை அழித்துவிட்டது என்று ஜாலியன்வாலா பாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஜாலியன்வாலா பாக் சுதந்திர போராட்ட வீரர்கள் அறக்கட்டளை தலைமையில் ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தின் உள்ளே தர்ணா போராட்டம் நடைபெற்றுள்ளது.

அறக்கட்டளையின் தலைவர் சுனில் கபூர் கூறுகையில், “ஜாலியன்வாலா பாக் வரையிலான குறுகிய பாதையைச் சீரமைப்பு செய்வதாக கூறி பஞ்சாபின் வரலாற்றை அழித்துவிட்டனர்.  அம்மக்களின்மீது துப்பாக்கிச் சூடு நடத்த, இந்தப் பாதை வழியாகதான் ஜெனரல் டையர் சென்றார். தற்போது இந்த குறுகிய பாதையை திருமண விழாவின் நுழைவு வாயிலை போல மாற்றியிருக்கிறார்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அலங்காரங்களுக்கு மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இந்த இடம் அலங்கரித்து பார்க்கப்பட வேண்டிய இடமல்ல. நம் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூற வேண்டிய இடம். என் கொள்ளு தாத்தாவான வாசு மல் கபூர் போன்ற உயிர் நீத்தவர்களின் படங்கள் அகற்றப்பட்டுள்ளன.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களில் சுனில் கபூரின் கொள்ளு தாத்தா வாசு மலுவும் ஒருவர்.

Source: the indian express

தொடர்புடைய பதிவுகள்:

‘புதிய ஜாலியன்வாலா பாக் நினைவகம் வரலாற்றை திரிக்கும் செயல்’ – வரலாற்றாசிரியர்கள் கண்டனம்

‘ஹரியானா விவசாயிகள் மீதான தடியடி இரண்டாவது ஜாலியன்வாலா பாக்’ – சிவசேனா கண்டனம்

பொழுது போக்கு பூங்காவான ஜாலியன் வாலாபாக் நினைவிடம் – அரசியல் தலைவர்கள் கண்டனம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்