கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 3௦ நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்திருந்தாலும் அது கொரோனா உயிரிழப்பாகவே கருதப்பட்டு 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, கொரோனா பரிசோதனை மேற்கொண்டதிலிருந்து அல்லது தொற்று உறுதிசெய்யப்பட்டு 3௦ நாட்களுக்குள் உயிரிழந்தால் அது கொரோனாவினால் மரணமடைந்தாகக் கருதப்படும் என்று கூறியுள்ளது.
மேலும், மருத்துவமனையிலோ அல்லது வெளி இடத்திலோ மரணமடைந்தாலும் அது கொரோனா மரணம் என்று ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் குறிபிட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு விளக்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 11 அன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த ஒன்றிய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல் படி, கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50,000 நிதி உதவி வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் கூறி இருந்தது.
நிலத்தில் இருந்து வெளியேற மறுத்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு
மேலும், இதற்கான நிதி மாநில பேரிடர் நடவடிக்கை நிதியின் வழியாக வழங்கப்படும் என்றும், ஆவணங்களைச் சமர்ப்பித்த முப்பது நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் விஷம், தற்கொலை, கொலை, விபத்துகள் போன்றவற்றால் இறந்தால், அது கொரோனா மரணமாக கருதப்படாது என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.
பாரத் பந்த்திற்கு ஒவ்வொரு இந்தியரும் ஆதரவளிக்க வேண்டும்’ – போராடும் விவசாயிகள் குழு வேண்டுகோள்
இந்நிலையில், நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து பிரமானப் பத்திரம் தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 3௦ நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்திருந்தாலும் அது கொரோனா உயிரிழப்பாகவே கருதப்படும் எனக் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.