Aran Sei

பீமா கோரேகான் வழக்கில் தலோஜா சிறையில் உள்ளவர்களை வேறு சிறைக்கு மாற்ற கூடாது – நீதிமன்றத்தில் மனுவளித்த உறவினர்கள்

பீமா கோரேகான் எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டபட்டவர்களை அவர்கள் அடைக்கப்பட்டுள்ள தலோஜா சிறையிலிருந்து வேறொரு சிறைக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆனந்த் தெல்டும்டேவின் மனைவி ரமா, சுரேந்திர காட்லிங்கின் மனைவி மினால் மற்றும் சுதிர் தாவலேயின் ஷரத் கேய்க்வாட் ஆகியோர் இந்த இடமாற்று ஆணையை தள்ளுபடி செய்ய வேண்டுமென தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

மேலும், கடந்த ஏப்ரல் 1 அன்று, தேசிய புலனாய்வு முகமையின் நீதிபதி டி.இ.கொதலிகர், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் அவர்களிடம் கேட்காமலேயே வேறொரு சிறைக்கு இடமாற்றம்  செய்யும் உத்தரவுக்கு அனுமதியளித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், “தலோஜா சிறையின் முன்னாள் கண்காணிப்பாளர் குர்லேகர்  எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டபட்டவர்களை துன்புறுத்தினார். அவர்கள் சிறையில் இருப்பதை  முடிந்தவரை சங்கடமாக மாற்ற அவ்வப்போது சட்டங்கள் மற்றும் சிறை கையேடுகளை மீறினார். அடிப்படை  தேவைகளை மறுத்து, அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில் தடையை ஏற்படுத்தி அவர்கள் துன்புறும் வகையில் அநீதியாக நடந்து கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, “குற்றம்சாட்டப்பட்டவர்களை தலோஜா சிறையில் இருந்து  அம்மாநிலத்தில் உள்ள வேறு எந்த சிறைக்கும் மாற்றம் செய்யும் உத்தரவுக்கு முன்னாள் காவல்  கண்காணிப்பாளர் குர்லேகர்  காவல் கண்காணிப்பாளரிடம்  (சிறைச்சாலை) நிர்வாக உத்தரவு கோரியிருந்தார். இந்நிலையில், காவல் கண்காணிப்பாளரும் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல்  நிர்வாக உத்தரவுக்கு அனுமதியளித்துள்ளார் இதனைக்   கண்டிக்கிறோம் என்றும் அந்த மனுவில்  தெரிவித்துள்ளனர்.

பீமா  கோரேகான் எல்கர் பரிசத் வழக்கில் குற்றம்சாட்டபட்ட  பெண்களான சுதா பரத்வாஜ், ஷோமா சென் , ஜோதி ஜக்தப் ஆகியோர்  பைக்குல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று,  குற்றம்சாட்டப்பட்ட ஆண்களான சுதிர் தாவலே, ரோனா வில்சன்,  காட்லிங், மகேஷ் ரவுத், வரவர ராவ் (தற்காலிக மருத்துவ பிணையில் உள்ளார் ), வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃபெரேரா,  தெல்தும்ப்டே, கவுதம் நவ்லகா, ஹனி பாபு, சாகர் கோர்க்கே மற்றும் ரமேஷ் கைச்சோர் ஆகியோர் தலோஜா சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

source; the hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்