கடந்த ஆகஸ்ட் 17 அன்று, ஸ்ரீநகரின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த முஹரம் ஊர்வலம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற, குறைந்தபட்சம் 1௦ மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள சுயாதீன பத்திரிகையாளர் புர்ஹன், ” என்னை உதைத்து,நீ முகநூல் பத்திரிகையாளர்” என்று காவல்துறையினர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று காவல்துறையால் தாக்கப்பட்ட புகைப்படக்கலைஞர் ஹமீது, “இந்த வன்முறையால் எனது கேமரா சேதமடைந்துள்ளது”. என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையினர் துப்பாக்கிகளோடு அவர்களை நோக்கி ஓடி வந்ததாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிபிசி உருது செய்தி நிறுவனத்தின் புகைப்படக்கலைஞர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரோடு பிற பத்திரிகையாளர்களும் இணைந்து கொள்ள காவல்துறை தாக்குவதை நிறுத்தியுள்ளது.
மேலும், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது குறித்து காஷ்மீர் அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கான பன்னாட்டு கண்காணிப்புக் குழு கோரியுள்ளது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 6 காவலர்களை அம்மாநில காவல்துறை பணிஇடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
SOURCE: THE WIRE
தொடர்புடைய பதிவுகள்:
இந்தியாவுடனான வணிகத்தை நிறுத்திய தாலிபான்கள் – எப்.ஐ.இ.ஒ அமைப்பு தகவல்
பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க வேண்டும் – தமிழ்நாடு அரசிடம் திருமாவளவன் கோரிக்கை
பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமான? – நிர்மலா சீதாராமன் கூறுவது சரியா?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.