Aran Sei

பாஜகவினர், வருணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள்தான் – கி.வீரமணி குற்றச்சாட்டு

சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்ற பொருளிருக்கும்போது, சூத்திரன் என்றால் ஏன் எதிர்ப்பு, ஏன் கோபம் என்று கேட்கிறார் காவி சாமியாரிணி பிரயாக்சிங் தாக்கூர் என்றும் இது தான் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். நிலை என்பதைப் புரிந்துகொள்வீர் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பிரயாக்சிங் தாக்கூர் இரண்டு நாள்களுக்குமுன் போபாலில் ‘க்ஷத்திரிய மஹா சபா’ கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பேச்சு, நேற்று முன் தினம் (டிசம்பர் 13) தி இண்டியன் எக்ஸ்பிரஸ்  நாளேட்டில் வெளிவந்திருந்தது.

“சூத்திரர்கள் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்” – பிரக்யா சிங் தாக்கூர்

அதில், ”நமது சமூகம் ‘பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர’ என்று நால் வருணமாகப் பகுக்கப்பட்டிருக்கிறது என்பது மனுதர்ம சாஸ்திரங்கள் கூறும் ஏற்பாடு.” என்று பிரயாக்சிங் தாக்கூர் பேசியிருந்தார்.

”இதன்படி க்ஷத்திரியர்களை, ‘க்ஷத்திரியர்கள்’ என்று அழைக்கும்போது, அவர்கள் ஒன்றும் சங்கடப்படுவதில்லை. பிராமணர்களை, ‘பிராமணர்கள்’ என்று அழைக்கும்போது அவர்கள் வருத்தப்படுவதில்லை. வைசியர்களை, ‘வைசியர்கள்’ என்று அழைக்கும்போது மனம் வருந்துவது இல்லை. சூத்திரர்களை, ‘சூத்திரர்கள்’ என்று அழைக்கும்போது மட்டும் மனம் வருந்துவதும், எதிர்ப்புக் காட்டுவதும் ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மனுதர்மம் : திருமாவளவனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர்நீதி மன்றம்

இதுகுறித்து, இன்று (டிசம்பர் 15) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சூத்திரன் என்றால் இந்து தர்ம சாஸ்திரப்படி தேவடியாள் மகன் என்று பொருள் இருக்கும் நிலையில், ‘சூத்திரன் என்றால் ஏன் எதிர்ப்பு – கோபம்?’ என்று ஆர்.எஸ்.எஸ். சாமியாரிணி மாலேகான் குண்டுவெடிப்புப் புகழ் பிரயாக்சிங் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது ஆர்.எஸ்.எஸ்ஸின் ஜாதி ஆணவப் போக்கையும், பெரும்பாலான பார்ப்பனரல்லாதாரையும், ஒட்டுமொத்தமான பெண்களையும் ஜாதி ஆணவத்தோடு இழிவுபடுத்துவதாகும்.” என்று விமர்சித்துள்ளார்.

பெண் விரோத, தலித் விரோத கருத்துகள் – மனுதர்மத்தை எரித்த ஏபிவிபி

”மும்பை மாலேகான் குண்டுவெடிப்பு – பயங்கரவாத வழக்கில் குற்றவாளியாக உள்ள பிரயாக் சிங் தாக்கூர் தன்னை ஒரு சாமியாரிணி என்று கூறிக்கொண்டு, காவி உடையுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிரக் கொள்கையாளராக, இந்துத்துவாவின் அதிதீவிர பரப்புரையாளராக அறிமுகம் செய்துகொண்டு ஜாமீனில் உள்ள ஒருவர், இடையில் பா.ஜ.க. அவருக்குத் தேர்தல் டிக்கெட் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினராகி, மக்களவையில் வெளிப்படையாக கோட்சேவைப் புகழ்ந்து பேசி, எதிர்க்கட்சியினர் (தி.மு.க. உள்பட) பலரின் கண்டனத்திற்கு ஆளான ஒருவர்.” என்று மேற்கோள்காட்டியுள்ளார்.

மேலும், இது அவர்களுக்கு உள்ள அறியாமையைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

‘இந்தியாவில் மனுஸ்மிருதி எதிர்ப்பே, பெண்ணுரிமை போராட்டம்’ – கவிதா கிருஷ்ணன்

பா.ஜ.க. எப்படிப்பட்ட ‘கோட்சே பக்தர்களையும், வருணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்கும் வன்னெஞ்சர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது’ என்பதற்கு – ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்‘ என்பதுபோல் – இது ஆதாரம் ஆகும் என்று கி.வீரமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

”நால் வருணத்தை – ஜாதிப் பிரிவை எவ்வளவு சர்வ சாதாரணமாக – ‘சூத்திரர்’ என்றால், ஏன் ஆத்திரப்படவேண்டும் என்று கேட்கும் இவருக்குள்ளதுதான் ஆணவத்தின் அறியாமையின் உச்சம்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மனுதர்மத்தை அம்பேத்கரும் கொளுத்தினார் – ஆனந்த் டெல்டும்டே

“பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் எனப்படுவோர் (மூன்று பிரிவு)  மனுதர்மப்படி உயர்ந்த ஜாதியினர்; அடுக்குப் படிக்கட்டு ஜாதி முறையில் மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறபடி, ஒருவருக்குக் கீழ் மற்றொருவர் என்ற Graded Inequality என்று அமைக்கப்பட்டுள்ளதில், சூத்திரர் மற்ற மூன்று ஜாதியினருக்கும் குற்றேவல் செய்யும் அடிமைப் பணிக்காகவே பிரம்மாவினால் காலில் பிறக்கப்பட்டவர்கள்.” என்று சாஸ்திரத்தில் உள்ளதாக கி.வீரமணி மேற்கோள்காட்டியுள்ளார்.

மேலும், “அவன் அடிமையானபடியால், கல்வி, மண உரிமை, சொத்துரிமையாகிய எதுவும் அவனுக்குக் கிடையாது. சூத்திரன் என்றால் என்ன பொருள் என்பதற்கு மனுதர்மத்தின் எட்டாவது அத்தியாயம், 415 ஆவது சுலோகம் கூறுவது, யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், குலவழியாகத் தொன்று தொட்டு வேலை செய்கிறவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என்று தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடை செய்- விசிக போராட்டம்

416 ஆவது சுலோகத்தில், ”மனையாள், பிள்ளை, வேலைக்காரன் – இவர்களுக்குப் பொருள் சுவாதீனமில்லை. இவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும், அவை அவர்களின் எஜமானனையே சாரும்; அதாவது எஜமானன் உத்தரவின்றி தரும விஷயத்திற்கும் தங்கள் பொருளைச் செலவழிக்கக் கூடாது” என்றும் 417 ஆவது சுலோகத்தில், “பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக்கொள்ளலாம். எஜமான் எடுத்துக்கொள்ளத் தக்க பொருளை உடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரரல்ல.’’ என்று உள்ளதாக கி.வீரமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

‘சூத்திரன்’ என்ற சொல் எவ்வளவு இழிதகைச் சொல். ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி’ என்று முழங்கிய தந்தை பெரியார் மண்ணில் வெடித்துக் கிளம்பியது இந்த அடிப்படையில்தான். சூத்திரன் என்பவனை மட்டும் இழிவுபடுத்தவில்லை என்றும் ‘தேவடியாள் மகன்’ என்று அழைப்பதன்மூலம் அந்தச் சமூகத்தின் பெண் குலத்தையே அவதூறுக்கும், அவமானத்துக்கும் ஆளாக்குவதைக் கண்டு பெண்ணினம் – சொரணையுள்ளதாக இருந்தால் – வெகுண்டெழுந்து இந்த ஒரு குலத்துக்கொரு நீதியை அநீதி என்று கண்டித்திருக்க வேண்டாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘‘பெண்கள் எல்லோருமே சூத்திர ஜாதிதான் – பிராமணப் பெண்கள், வைசியப் பெண்கள், க்ஷத்திரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது. அதனால், சூத்திரன் வெளியே உழைப்பதைப்போல, சூத்திரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்க வேண்டும்.” என்று ‘ஹிந்து மதம் எங்கே போகிறது?’ என்ற நூலை எழுதிய 101 வயது நிரம்பிய, அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார், மனுவில் உள்ள மற்றொரு சுலோகத்தையும் சுட்டிக்காட்டுவதாக கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

‘ மனு தர்மத்தில் பெண் விரோத, தலித் விரோத கருத்துக்கள் உள்ளன ‘ – ஆர்.எஸ்.எஸ்

மேலும், ”வேத ஓசையைக் கேட்கக் கூடாது. யாகங்கள் நடந்தால், அதில் ஓதப்படும் வேத மந்திரங்களை கேட்காமல் இருப்பதற்காகப் புடவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும். பெண்களுக்குக் கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது.’’ என்று இராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர் சாமியாரிணி  ஆகவும் சாஸ்திரப்படி உரிமை இல்லை – எம்.பி., ஆனதும்கூட சாஸ்திர விரோதம் என்றும் அதைவிட பெரிய குண்டுவெடிப்பு சதி வழக்கில் குற்றவாளியாக ஆனதும் அதைவிட எவ்வளவு பெரிய சாஸ்திர விரோதம் – சட்ட விரோதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

`நாவை அடக்கிப் பேசுங்கள்’ – பாஜகவிற்கு ஆதித்தமிழர் பேரவை எச்சரிக்கை

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – காவிகளைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தக் கும்பலை அடையாளம் கண்டு தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவீர் என்று கி.வீரமணி கோரிக்கை வைத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்