Aran Sei

விமான நிலையத்தில் நீக்கப்பட்ட அண்ணா, காமராசர் பெயர்கள்: ’தொடர்ந்து தமிழர்களின் உணர்வினைப் புண்படுத்தும் பாஜக’ – கி.வீரமணி கண்டனம்

சென்னை விமான முனையங்களில் இடம்பெற்ற அண்ணா – காமராசர் பெயர் நீக்கம் செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூகநீதிக்காவலர் மாண்பமை வி.பி.சிங் அவர்க ள் பிரதமராக இருந்தபோது (1989) முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான முனையத்திற்குக் காமராசர் பெயரும் சூட்டப்பட்டன.” என்று அவர் நினைவுக்கூர்ந்துள்ளார்.

‘மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன்’ – பேரறிஞர் அண்ணா

“இப்பொழுது மத்திய பாஜக ஆட்சியில் இருபெரும்  தலைவர்களின் பெயர்களும்  திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வினைப் புண்படுத்தும் வேலையில் மத்திய பா.ஜ.க. ஆட்சி ஈடுபட்டு வருகிறது.” என்று கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் உடனடியாக ஏற்கெனவே இருந்து வந்த அரும்பெரும் தலைவர்கள் அண்ணா, காமராசர் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுயாட்சியின் நாயகன் பேரறிஞர் அண்ணா – பிரவீண்

மேலும், இதுகுறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரத்தக் குரல் எழுப்பித் தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை மதிக்கச் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்