கொரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளில் ஒன்றிய மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைக் குறித்து ஒப்பிட்டு ரீயுட்டர்ஸ் செய்தி ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது
இந்த ஆய்வைத் தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேர்காணல் கண்டும், தேசிய மற்றும் மாநில தரவுகளுடன் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வின் வழியாக கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் கொரோனாவை முன்கூட்டியே கண்டறியும் வகையிலும், டெல்லி போன்ற பெரிய நகரங்களில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் பற்றக்குறையால் பலர் இறந்த போதும் கேரளாவில் இறப்பு விகிதத்தைக் கட்டுபடுத்தும் வகையிலும் அம்மாநில அரசின் செயல்பாடுகள் இருந்ததாகவும் ரீயுட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனாவைத் திறன் வாய்ந்த அளவில் கண்டறிந்தும், நாட்டின் தேசிய சராசரியை விட இருமடங்கு அதிகமாக மக்கள் அடர்த்திக் கொண்ட ,மாநிலமாக கேரளா உள்ளதால் கொரோனா எண்ணிக்கை கேரளாவில் அதிகமாக பதிவாகியுள்ளது.
மேலும், நாடுமுழுதுமுள்ள மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட மாநிலங்களுக்கு மத்தியில் கேரளாவில் 0.5% இறப்பு வீகிதமே பதிவாகியுள்ளது. ஆனால், தேசிய அளவில் 1.4% மும், அதிக மக்கள் தொகைக்கொண்ட உத்தரபிரதேசத்தில் 1.3% மும் இறப்பு வீகிதம் பதிவாகியுள்ளது.
அதுமட்டுமன்றி, கேரள மாநில அரசு கொரோனாத் தொற்றைக் கண்டறிய துரித ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொண்டு, கண்டறிந்து வீட்டிலேயே தனிமைப்படுத்தினர்.
இதனை ஒன்றிய அரசு விமர்சித்த நிலையிலும் இந்த நடைமுறையின் காரணமாகவே யாருக்கு உண்மையிலேயே ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி தேவை என்பதைக் கண்டறிந்து உதவ எளிதானதாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசு பரிந்துரைத்த ஆர்-டி-பி-சி-ஆர் சோதனை சரியான பரிசோதனை முடிவுகளை கூறினாலும், பரிசோதனை முடிவுகள் வர காலதாமதமாவதால் நோயுற்றவர்களுக்கு அதிகப்படியான நோய் அறிகுறிகளும், நோயுற்றவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.
இவ்விரண்டு ஓப்பீடுகளின் வழியாக நாட்டின் ஒட்டுமொத்த இறப்பு சராசரியை விட கேரள மாநில சராசரி மிகவும் குறைவாக உள்ளதும் பரந்துபட்ட அளவில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது என்று ரீயுடர்ஸ் கூறுகிறது.
மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொலைபேசி வழியே ஆலோசனை, மருந்துகள், ரத்த ஆக்சிஜன் அளவைக் கண்டறிய ஆக்சிமீட்டர் போன்ற உதவிகளை கேரள மாநில அரசு வழங்கியுள்ளது.
இதனையொத்த கட்டமைப்பு டெல்லியிலும் இருந்துள்ளது. ஆனால் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்தபோது இந்தக்கட்டமைப்பு சிதைந்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், “நாங்கள் வேறு மாதிரியான திட்டத்தை செயல்படுத்தினோம், எங்கள் மாநிலத்தின் இறப்பு வீதமே எங்களின் சிறப்பான செயல்பாடுகளை உணர்த்துகிறது” என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் கொரோனா தொற்று 10%க்கும் அதிகமாக உறுதிபடுத்தப்பட்டாலே மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்க உத்தரவிட்ட நிலையில், கேரளாவில் தொற்று விகிதம் 15% இருந்த நிலையிலும் கடைகள்,வணிக வளாகங்கள் செயல்பட்டுள்ளன.
இந்தச் சமயத்தில் நாடுமுழுதும் உள்ள மாநிலங்களில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையைவிட கேரளாவில் அதிகப்படியான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக உத்தரபிரதேசத்தில் 1௦௦ க்கும் 33 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பொழுது, கேரளாவில் 86 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோன்று, வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாடுமுழுதும் உள்ள 18 வயதுக்கு மேற்ப்பட்ட 48 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பு மருந்து செலுத்த முயன்று வரும்நிலையில், கேரள மாநிலம் 18 வயதுக்கு மேற்ப்பட்ட 55 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பு மருந்து செலுத்தியுள்ளது.
மேலும், ஒன்றிய அரசு 70% கொரோனா சோதனைகளை ஆர்.டி-பி.சி.ஆர் முறையில் நடத்த பரிந்துரைத்துள்ளது. ஆனால், கேரளாவிலோ 50% க்கும் குறைவாக இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கேரளாவின் இந்த செயல்முறையை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, “இது கேரள மாதிரி இல்லை, முறைதவறிய மேலாண்மை” என்று குற்றம்சாட்டி இருந்தார்.
எனினும், ஜூலை மாத அரசின் கணக்குபடி பாஜக ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள 7௦% க்கும் அதிகமானோர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். அதே வேளையில் கேரளாவில் 44% பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
source: ரீயுடர்ஸ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.