Aran Sei

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பதிலளித்த விவகாரம் – எதிர்ப்பு வலுத்ததால் பதவியை ராஜினாமா செய்த கேரள மாநில மகளிர் ஆணைய தலைவர்

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பதிலளித்த ஜோசபின் – எதிர்ப்பு வலுத்ததால் கேரள மாநில மகளிர் ஆணைய தலைவர் பதவியை 

 

தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் தொலைபேசி வாயிலாக கேட்ட கேள்விக்கு பதிலளித்தது தொடர்பாக எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கேரள மாநில மகளிர் ஆணையம் தலைவர் ஜோசபின், அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதல் தலைவராக பதவி வகித்து வந்த ஜோசபின், அவரது கருத்து தொடர்பாக ஏகேஜி பவனில் அமைந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.

அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்ததற்கு, கட்சியின் பல உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கட்சியின் அழுத்தம் காரணமாக ஜோபின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வாழப்பாடி முருகேசன் படுகொலை; தொடரும் காவல்துறை அத்துமீறல்கள் – அ.மார்க்ஸ்

மனோரமா செய்தி தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியின்போது எர்ணாகுளத்தை சேர்ந்த பெண், அவரது கணவன் மற்றும் மாமியாரால் சித்ரவதை செய்யப்படுவதாகவும் அதற்கு உதவுமாறும் கோரியிருந்தார்.

ஏன் காவல்துறையினரை அணுகவில்லை என அந்தப் பெண்மணியை ஜோசபின் கேட்டதற்கு, இதுகுறித்து யாருக்கும் தெரியாது என தெரிவித்தார். இதற்கு ஜோபின் பின்னர் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் என தெரிவித்தார்.

குடும்ப நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்திய ஜோசபின், இதனால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என தெரிவித்தார்.

இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்

மேலும், “நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?. நீங்கள் உங்கள் கணவருடன் வாழ வரும்பவில்லை என்றால், நீங்கள் விவாகரத்து மற்றும் இழப்பீடு பெறுவதற்கு ஒரு நல்ல வழக்கறிஞர்மூலம் ஒரு குடும்ப நீதிமன்றத்தை அணுக வேண்டும்” என தெரிவித்தார்.

ஜோசபின் தெரிவித்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

வடக்கரா சட்டமன்ற உறுப்பினரும், ஆர்.எம்.பி கட்சியின் தலைவருமான கே.கே. ரேமா, அவரது முகநூல் பதிவில், “அவர் (ஜோசபின்) ஆரம்பத்தில் இருந்தே திமிர் மற்றும் உணர்வின்மையின் குரலை வெளிப்படுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமோ அல்லது ஆதரவோ வழங்கவில்லை. இத்தகைய கருத்துகள் அவர் ஆக்கிரமித்துள்ள பதவியின் புனிதத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன” என தெரிவித்தார்.

‘தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கத் தடை விதியுங்கள்’- தமிழ்நாடு அரசுக்கு எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்

“அவர் (ஜோசபின்) மகளிருக்கு எதிரான ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட வேண்டும்” என இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஷமி பிரம்பில் தெரிவித்துள்ளார்.

Source : The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்