Aran Sei

கேரள தலித் சிறுமிகள் கொலை: பினராயி விஜயனுக்கு எதிராக தேர்தலில் களமிரங்கும் சிறுமிகளின் தாய்

2017 ஆம் ஆண்டு, கேரள மாநில வலயாரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட இரண்டு தலித் சகோதரிகளின் தாய், நடக்கவுள்ள அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடோம் தொகுதியில் போட்டியிடும்  பினராயி விஜயனுக்கு எதிராகச் சுயேட்சை வேட்பாளராக அவர் களமிறங்கவுள்ளார்.

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவதற்கு வழிவகுத்த,  கேரள காவல்துறை அதிகாரிகளை சட்டவிரோதமாக பாதுகாத்த ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் எதிரான போராட்டத்தின் ஒருபகுதியாக எனது வேட்புமனு இருக்கும் என்று கொலையான சிறுமிகளின் தாய் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிக்கு எதிராக பாலியல் புகார் – நடவடிக்கை எடுக்காதது ஏனென்று காவல்துறையிடம் நீதிமன்றம் கேள்வி

மேலும் அச்செய்தியில், “போராட்டக் குழுவுடன் கலந்துரையாடிய பின்னரே, தர்மடோமில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளேன். என் மகள்களுக்கு நீதி கிடைக்க, நான் தெருக்களில் உட்கார வைக்கப்பட்டு, தலைமுடிகளை மழிக்கச் செய்யப்பட்டேன். டி.எஸ்.பி சோஜன், எஸ்.ஐ.சாக்கோ போன்ற காவல்துறை அதிகாரிகள் காவல்துறையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். காவல்துறை தொப்பி இல்லாத அவர்களின் தலையை நான் பார்க்க விரும்புகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு, ஜனவரி 13 ஆம் தேதி, கேரளா- தமிழ்நாடு எல்லையில் உள்ள வலயார் அருகே 13 வயதுடைய தலித் சிறுமி, தனது வீட்டில் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியரானார் நீதா அம்பானி – எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 4 ஆம் தேதி, 9 வயதான அச்சிறுமியின் இளைய சகோதரியும் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் பெரியளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.

இரண்டு சிறுமிகளின் பிரேத பரிசோதனை முடிவில், அவர்கள் இறப்பதற்கு முன்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரியவந்தது. இது தொடர்பாக, ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

2019 ஆம் அண்டு அக்டோபர் 25 ஆம் தேதியன்று, சிறப்பு போக்ஸோ விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டது.  மேலும், அந்த உத்தரவில், மூவர் மீது சுமத்தப்பட்ட சந்தேககங்களுக்கு அப்பால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை நிரூபிப்பதில் அரசு தரப்பானது தோல்வியடைந்திருக்கிறது என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

வழக்குத் தொடுத்தப் பெண் எரித்து கொலை – பாலியல் வன்கொடுமை வழக்கில் பிணையில் வெளிவந்த நபரின் வெறிச்செயல்

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம், முந்தைய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவர்களை மீண்டும் கைது செய்யவும், வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கை சிபிஐவிடம் ஒப்படைக்க கேரள அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்