Aran Sei

கேரளா: விஸ்மயா வரதட்சணை தற்கொலை வழக்கு – கணவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.12.55 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12.55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொல்லம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாநில மோட்டார் வாகனத் துறையில் வாகன ஆய்வாளராக இருந்த கிரண் குமாரின் மனைவியும்  ஆயுர்வேத மருத்துவ மாணவியுமான விஸ்மயா வரதட்சணை தற்கொலை வழக்கில் கிரண் குமாரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 304-பி (வரதட்சணை மரணம்), 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் 498-ஏ (பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான நடத்தை) ஆகியவற்றின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியது.

வரதட்சணை கொடுமை: விஸ்மயா தற்கொலை வழக்கு – கணவர் குற்றவாளி என கேரள நீதிமன்றம் தீர்ப்பு

வரதட்சணை மரணம் தொடர்பான வழக்கில் தண்டனையை அறிவித்துள்ளது கொல்லம் நீதிமன்றம்.

இந்திய தண்டனைச் சட்டம் 304-பி பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரிவு 306-ன் கீழ் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், 498-ஏ பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ் 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும், சட்டத்தின் 4-வது பிரிவின் கீழ் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக,  கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்மயா(24). ஆயுர்வேத மருத்துவத்தில் இறுதி ஆண்டு படித்து வந்த அவர், கொல்லத்தில் உள்ள சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமார் என்பவருடன் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில்  திருமணம் நடைபெற்றது.  இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக விஸ்மயா குடும்பத்தினர் 100 பவுன் நகை, 1.25 ஏக்கர் நிலம், 11 லட்சம் மதிப்புமிக்க டொயோட்டா கார் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். ஆனாலும், வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண் மோசமாக தாக்கி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

ஷாஹி இத்கா மசூதியை தூய்மைப்படுத்த அபிஷேகம் செய்ய அனுமதிக்க வேண்டும் – இந்து மகாசபா நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. அவரது மரணம்  நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் அவரின் மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றம் சாட்டினர். இந்நிலையில், இந்த வழக்கு கொல்லம் கூடுதல் நீதிமன்றம் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் கிரண் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.என். சுஜீத்  தண்டனை விவரத்தை இன்று  வெளியிட்டுள்ளார். அதில், கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Source: Theindianexpress

Savukku Shankar Arrest ஆக வாய்ப்பே கிடையாது Piyush Manush Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்