Aran Sei

கேரளாவின் ஜிகாத்திய இயக்கங்களுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆதரவளிக்கிறது – யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

credits : PTI

கேரளாவில் இருக்கும் இடது  ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி  மதவாத  சக்திகளுக்கும்  ஜிகாத்திய  இயக்கங்களுக்கும் ஆதரவளிப்பதாக  உத்தர  பிரதேச  முதல்வர்  யோகி  ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளதாக  தி இந்து  செய்தி  வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய இளைஞர்கள், இந்துப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது

இந்நிலையில், நேற்றைய தினம், ஹரிபத் பகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட யோகி ஆதித்யநாத், ”கடந்த 2009-ம் ஆண்டே, கேரள  உயர்  நீதிமன்றம் கேரள அரசை லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தை இயற்றக் கூறியது. ஆனால், கேரள அரசு இன்னும் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தை இயற்றவில்லை. கேரளாவை ஆண்ட அரசுகள் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ மற்றும் ஜிகாத்திய இயக்கங்களுடன் இணைந்துக் கொண்டு, கேரளாவை ஆபத்தான பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டன” என்று அவர் கூறியுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

” ‘லவ் ஜிகாத்’, மாட்டிறைச்சி குறித்து கருத்து சொல்ல முடியாது ” – நேர்காணலை விட்டு வெளியேறிய கேரள பாஜகவின் மெட்ரோமேன் ஈ ஶ்ரீதரன்

மேலும், ”உத்தர பிரதேசத்தில், நாங்கள் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், கேரளாவில் லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஏன் சட்டம் இயற்றப்படாமல் இருக்கிறது? இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி இரண்டும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு ஜிகாதிகளை கண்டும் காணாமல் விட்டுவிட்டனர்” என்று அவர் தெரிவித்துள்ளதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது.

‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்டணி கட்சித் தலைவர் சவ்தாலா கருத்து

கடந்த பிப்ரவரி மாதம், கேரள வந்த யோகி ஆதித்யநாத், ”2009-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் லவ் ஜிகாத்தை நிறுத்தாவிடில் கேரளா இஸ்லாமிய  மாநிலமாக மாறிவிடும் எனக் கூறியதை கண்டுகொள்ளாமல் கேரள அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது” என்று  கூறியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்