Aran Sei

‘இட ஒதுக்கீடு அமைப்பால், கேரளா சமூக நீதியின் சொர்க்கமாக உள்ளது’ – ராமதாஸ்

கேரளாவில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுமுறையை பாராட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அங்கு உண்மையான சமூக நீதி மலர்கிறது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளத்தில் 1950 ஆம் ஆண்டில் இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது 45%  வழங்கப்பட்டது. 1957-ஆம் ஆண்டில் அது 50% ஆக உயர்த்தப்பட்டது. பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 40% இட ஒதுக்கீடு ஒரே பிரிவாக வழங்கப்பட்டது. ஆனால், அந்த வகுப்பில் உள்ள பல சாதிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

அன்புமணி ராமதாசிடம் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளரை மிரட்டிய பாமக தொண்டர்கள்

மேலும், “1966-ஆம் ஆண்டில் குமாரபிள்ளை ஆணையத்தின் அறிக்கைப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 40% இட ஒதுக்கீடு 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டது” என்று சுட்டிக் காட்டியுள்ள ராமதாஸ், “பல சாதிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று தெரியவந்ததை அடுத்து 1990-களின் தொடக்கத்தில்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 40% இட ஒதுக்கீட்டில், மேலும் 3 புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு மொத்தம்  8 பிரிவுகளாக  அதிகரிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.  

ரயில் மறிப்பு, கற்கள் வீச்சு – தொடங்கியது பாமக இடஒதுக்கீடு போராட்டம்

“ஈழவர்களுக்கு 14%, இஸ்லாமியர்களுக்கு 12%, லத்தீன் கிறித்தவர்களுக்கு 4%, நாடார்களுக்கு 2%, கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு 1%, தீரவர்களுக்கு 1%, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3%, விஸ்வகர்மாக்களுக்கு 3% என இடப்பங்கீடு செய்யப்பட்டுள்ளது.” என்று கேரளாவில் உள்ள இட ஒதுக்கீடு குறித்து ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, கேரளாவின் இட ஒதுக்கீடு அமைப்பு காரணமாகவே அம்மாநிலம் சமூக நீதியின் சொர்க்கமாக உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்