Aran Sei

காவல்துறை அதிகாரியை மிரட்டியதாக நடிகர் திலீப் மீது புகார் – குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை

டிகை பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடிகர் திலீப், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரிக்கப்பட்டுள்ளார்.

நாளை(ஜனவரி 25), மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று திலீப்பிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, ஜனவரி 27ஆம் தேதி வரை திலீப்பைக் கைது செய்யக் காவல்துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், திலீப் உள்ளிட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஜனவரி 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 9 மணி தொடங்கி, இரவு 8 மணி வரை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த காவல்துறையினரை கொல்ல சதி – நடிகர் திலீப் மீது புதிய வழக்கு

இவ்வழக்கு தொடர்பான எல்லா விசாரணைக்கும் திலீப் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஜனவரி 9ஆம் தேதி, விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக திலீப் உள்ளிட்ட ஆறு பேர் மீது குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 116 (சிறைத்தண்டனையுடன் கூடிய தண்டனைக்குரிய குற்றத்தைத் தூண்டுதல்), 118 (மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைச் செய்ய திட்டமிடுதல்), 120ஆ (குற்றச் சதிச் செயலில் ஈடுபட்டவர்), 506 (குற்றமிடுதல்) மற்றும் 34 (பலரால் செய்யப்பட்ட குற்றச் செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

நடிகர் திலீப் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வீணாக்காதீர் – பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வருக்கு கடிதம்

இவ்வழக்கின் எப்ஐஆரில் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். திலீப்பின் சகோதரர் அனூப் மற்றும் திலீப்பின் மைத்துனர் சூரஜ் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பு, பாபு செங்கமாநாடு ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.  ஒரு குற்றவாளி இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

முன்னதாக, நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் திலீப் எட்டாவது குற்றவாளியாக  உள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் பணியாற்றிய நடிகை ஒருவரை, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று இரவு, ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று துன்புறுத்தியதாக வழக்கு பதியப்பட்டது.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்