கேரளாவில் ஆளும் இடது சாரி முன்னணிக்கு எதிராக இஸ்லாமிய மாணவர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கேரளாவின் ஆளும் இடது சாரி முன்னணி அரசு, முறையற்ற மற்றும் பாரபட்ச நியமனங்களை மேற்கொள்ளவதாக இஸ்லாமிய மாணவர் சங்கத்தினர் மேற்கொண்ட பேரணி, மலப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது காவல்துறை தடியடி நடத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தடியடி நடத்தியதில், 7 மாணவர் அமைப்பினர் மற்றும் ஒரு புகைப்பட ஊடகவிலயாளர் காயமடைந்ததாகவும், இதில் மாத்ரூபூமி புகைப்பட கலைஞர் கே.பி.சதீஷ் குமார், தனது கையில் வைத்திருந்த கேமரா மற்றும் ஊடக அடையாள அட்டையைக் காட்டிய பிறகும் காவலர், சதீஷ் குமாரை தாக்கியதால் அவர் பலத்த காயமடைந்தாரென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பந்தல் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் கூட்டத்தினர் முன்பாகப் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர், வி.பி.சானு, இஸ்லாமியர் மாணவர் சங்கத்தினருக்கு எதிராகப் பேசியதால், இஸ்லாமிய மாணவர் சங்கத்தினர் அவருக்கு எதிராகத் திரும்பினர் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி.பி.சானு எதிராக இஸ்லாமிய மாணவர் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பியதோடு, கொடிகளைச் சேதப்படுத்தியதை, விவசாயிகள் போராட்டதினர் மீது இஸ்லாமிய மாணவர் சங்கத்தினர் தாக்குதல் நடத்தியதாக, தேசிய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி – வைகோ கண்டனம்
புகைப்பட ஊடகவியலாளர்மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ”சதீஷ் குமார், தனது அடையாள அட்டையைக் காட்டிய பிறகும், அவர்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது, ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது போலவும், பழிவாங்கும் நடவடிக்கை போலவும் தோன்றுகிறது” எனக் கேரளா ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட் யூனியனின் மாவட்ட செயலாளர் கே.பி.எம்.ரியாஸ் தெரிவித்ததாக தி ஹிந்து கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.