Aran Sei

வேட்புமனுவை திரும்பப் பெற பாஜக தலைவர் மிரட்டியதாகப் புகார்: கிரிமினல் வழக்கு பதிந்த கேரள காவல்துறை

கேரள சட்டமன்ற தேர்தலில், மஞ்சேஸ்வரம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு மற்றோரு வேட்பாளரை மிரட்டி லஞ்சம் அளித்த குற்றச்சாட்டில் அம்மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன் மீது கேரள காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மஞ்சேஸ்வரம் சட்டமன்ற தொகுதியில், கே. சுரேந்திரனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டிய வி.வி. ரமேசன் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்து நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களில் பெயரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உபா சட்டத்தில் சிறுவன் கைது – தன் இயலாமையால் குழந்தைகளிடம் ’வீரத்தைக்’ காட்டுகிறதா அரசு?

இந்திய தண்டனைச் சட்டத்தின் (லஞ்சம்) பிரிவுகள் 171 (B) மற்றும்  (E) பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வாரண்ட் இல்லாமல் கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் கூறியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜூன் 5 ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த சுந்தரா, ”ஆரம்பத்தில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் வேட்புமனுவை திரும்பப் பெற 2.5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது” என குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக இளைஞரணி தலைவரும்  சுரேந்திரனின் உதவியாளருமான சுனில் நாய்க், தன்னிடம் பணம் மற்றும் ஒரு ஸ்மார்போனை அளித்ததாக சுந்தரா தெரிவித்தார்.

பட்டியல் வகுப்பில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மீண்டும் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்

சுரேந்திரன் மீதான குற்றச்சாட்டு மற்றும் இரு குற்றச்சாட்டுகளால் கேரளாவில் பாஜக பின்னடவை சந்தித்து வருகிறது. கோடகரா நெடுஞ்சாலை சம்பவத்தைப் போன்று பாஜக ஹவாலா மோசடியின் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலை கொள்ளை தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு கேரள பாஜக அமைப்பு செயலாளர் எம். கணேசன், கட்சி அலுவலக செயலாளர் கிரிஷ் ஆகியோரை கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்காக  ராஷ்டரிய ஜனாதா கட்சியின் தலைவர் சி.கே. ஜானுவிற்கு 10 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக சுரேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

‘மன்கி பாத்தில் பிரதமர் கூறிய உண்மைக்குப் புறம்பான தகவல்’ – தி இந்து ஆய்வில் அம்பலம்

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, யக்ஷகனா கலைஞரான சுந்தரா 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதே போன்று இந்தத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் விலகிக்கொண்டார் என தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டமன்ற தேர்தலில் மஞ்சேஸ்வரன் தொகுதியில் சுரேந்திரன் 65, 013 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமெ பெற முடிந்தது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் ஏஎம்கே அஷ்ரப் 65, 758 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுரேந்திரனுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த வி.வி. ரமேசன் 40, 639 வாக்குள் பெற்ற மூன்றாம் இடம் பிடித்தார்.

‘உச்சநீதிமன்றத்தின் விமர்சனங்களுக்கு பிறகுதான் இலவச தடுப்பு மருந்தை அறிவித்த ஒன்றிய அரசு’ – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

2016 ஆம் ஆண்டு போட்டியிட்ட சுந்தரா 467 வாக்குகளை பெற்றார். இதனால், 89 வாக்குகள் வித்தியாசத்தில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் சுரேந்திரன் தோல்வியடைந்தார்.

சுந்தராவின் தகவல்களின் அடிப்படையில், காசர்கோடு காவல்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணைய நடத்தி இருக்கும் நிலையில், மாவட்ட காவல்துறை ஆணையர் பி.பி. ராஜீவ் மீதும் வி.வி. ரமேசன் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்ற ஒப்புதலுடன் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என மனுதாரரிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்