Aran Sei

பாஜக தலைவருக்கு ஆதரவாக பங்கு தந்தை கருத்து – தேவாலயத்தை காப்பாற்றியதால் பாஜகவுக்கு வாக்களிக்க கோரிக்கை

கேரளா மாநிலம் மாலன்கரா பகுதியில் உள்ள சிரியன் தேவாலயம் அதன் பக்தர்களிடம், செங்கனூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைவருக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆலப்புழா பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது இடிக்கப்படுவதிலிருந்து, பாஜக தலைவர் ஆர்.பாலசங்கர் தக்கசமயத்தில் தலையிட்டுத் தடுத்து நிறுத்தினார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடக்கும் மாநிலங்கள் – ‘ புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான காலம் குறைப்பு’ – தேர்தல் ஆணையம்

இந்த நிகழ்வை மையப்படுத்தி பேசிய செப்பாடு தேவாலயத்தின் செய்தி தொடர்பாளர் பங்குதந்தை ஆபிரகாம் கொனட் “மத நம்பிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, பாகுபாடின்றி, நாம் ஆர்.பாலசங்கர் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என, தேவாலயத்தின் தலைவர் இரண்டாம் மர்தோமா பாலோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“பிரதமரின் தலையீட்டால் தேவாலயம் இடிக்கப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டு, தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு காரணம் பாஜக தலைவர் பாலசங்கரின் இடையறாத முயற்சியே. அவர் தேர்தலில் வெற்றி  பெற நாம் வாக்களிக்கவில்லை என்றால் அது நமது நன்றி கெட்டத்தனம்” என்றும் ஆபிரகாம் கொனட் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு விளம்பரங்களில் பிரதமரின் படங்கள் – 72 மணி நேரத்தில் அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

மேலும் “இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தேவாலயத்தைக் காக்க துளியும் கவனம் செலுத்தவில்லை. ஆனால், பாலசங்கர் ஒரு தேவாலயத்தின் ஊழியர் போன்று செயல்பட்டு, தேவாலயத்தைக் காப்பற்றி இருக்கிறார்” என்றும் ஆபிரகாம் கொனட் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்பாடு தேவாலயம் கிபி 1050ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 47 சுவர் ஓவியங்கள் பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவருகிறது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் – தேர்தல் விதிமுறை மீறல் என திரிணாமுல் புகார்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது இடிக்கப்படவிருந்த தேவாலயத்தை, பாஜக தலைவர் பாலசங்கர் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தக்கசமயத்தில் தடுத்து நிறுத்தினார் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைந்தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து, அந்த தேவாலயத்தின்  வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னமாக அறிவித்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்