Aran Sei

‘காவி அரசியல் புறவாசல் வழியாக புகுத்தப்படுகிறது’ – லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக கேரள அரசு தீர்மானம

credits : the indian express

ட்சத்தீவின் நிர்வாகியின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் அம்மக்களுடன் துணை நிற்கும் விதமாக தீர்மானம் ஒன்றை கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டபேரவையில் முன்மொழிந்துள்ளார்.

லட்சத்தீவுகளின் புதிய  நிர்வாகி பிரபுல் கே பட்டேல் முன்மொழிந்துள்ள சட்ட திருத்தங்கள் அந்த மக்களுக்கு எதிராகவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும் இருக்கிறது என குற்றம்சாட்டும் தீவின் மக்கள். இதற்கு எதிராக போராட்டக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

‘லட்சத்தீவு பூர்வகுடிகளின் பண்பாட்டிற்கும், மதத்துக்கும் எதிரான சட்டத்திருத்தங்களை நீக்குங்கள்’ – பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

மக்களுக்கு எதிராக எதேச்சதிகாரத்துடன் செயல்படும் நிர்வாகியை இந்திய ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் பிபி முகமது பைசல் கடிதம் எழுதியுள்ளார்.

லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக மலையாளத் திரைக்கலைஞர் பிருத்விராஜ், கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து இருந்தனர்.

இந்நிலையில், இன்று (மே 31), லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய பினராயி விஜயன், “இச்செயற்பாடுகள் லட்சத்தீவுக்கூட்டத்தில் உள்ள பூர்வக்குடிகளின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை அழிக்கிறது. ஒன்றிய அர்சு தனது காவி அரசியலை புறவாசல் வழியாக புகுத்த முயல்கிறது. அந்த அரசியலின் ஒரு பகுதியாக தென்னை மரங்களுக்கு காவி நிறம் பூசப்பட்டிருக்கிறது. கார்ப்ரேட்டிகளின் நலனுக்காகவும் அவர்கள் வேலை செய்கிறார்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இரண்டாவது முறையாக பினராயி விஜயன் தலைமையிலான அரசாங்கம் பதியேற்றப் பின்னர், சட்டபேரவையில் முன்மொழியப்படும் முதல் தீர்மானம் இதுவாகும்.

Source; pti

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்