Aran Sei

‘விவசாய சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கே ஆதரவானது’ – கேரள சட்டமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம்

credits : the hindu

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், மத்திய அரசு வேளாண் விளைபொருள் மற்றும் வர்த்தகச் சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களை கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தை திரும்பி பெற வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு கடந்த 35 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

’எங்களுக்குள் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி’ – பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த விவசாயச் சங்கம்

இந்நிலையில், டிசம்பர் 21ஆம் தேதி, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது.

’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்

அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் “விவசாயச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிடப்பட்டிருக்கும் நாளுக்கு முன்பு, அதாவது டிசம்பர் 23 ஆம் தேதி, சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும்” என்று கூறியிருந்தார்.

மத்திய அரசின் விவசாயச் சட்டங்கள் : ‘முறியடிக்கக் கூடுகிறது’ பஞ்சாப் சட்டப்பேரவை

இதையடுத்து, ஒரு நாள் சிறப்புச் சட்டமன்றம் கூடுவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு, ஆளுநர் ஆரிஃப் முகம்து கானிடம் அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிறப்பு சட்டமன்றம் கூடுவதற்கான அவசர கால தேவை எதுவும் இல்லை எனக் கூறி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – பேரவையைக் கூட்ட கேரள ஆளுநர் ஒப்புதல்

இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், சிறப்புச் சட்டமன்றத்தை கூட்டுவதற்கு அனுமதி மறுத்துள்ளது வருந்தத்தக்கது என குறிப்பிட்டிருந்தார்.

`கூட்டாட்சிக்கு எதிரானது’ – விவசாயச் சட்டங்களுக்கு எதிராக கிராமசபைகள் தீர்மானம்

மேலும், அமைச்சரவை, சிறப்பு சட்டமன்றம் கூடுவதற்கு பரிந்துரை செய்யும் போது, ஆளுநர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தக் கோரிக்கையை நிராகரிக்க முடியாது எனக் கூறியிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் அரசாங்கம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையைப் பற்றி விவாதிப்பதற்காக சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டச் சொல்வதை ஆளுநர் நிராகரிப்பது, வருந்தத்தக்கது என முதல்வர் பினராயி விஜயன் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் இயற்றிய அலமேடா கவுன்டி – அமெரிக்காவின் 7-வது நகர மன்றம்

இதைத்தொடர்ந்து, கடந்த 25-12-20 அன்று கேரளாவின் சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார், ஆளுநரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுனில் குமார், ஆளுநருடைய கேள்விகளுக்கு அரசாங்கம் திருப்திகரமாகப் பதிலளித்ததாகக் கூறினார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று (26-12-20) கேரள சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் ஆளுநரை சந்தித்து பேசினார்.

போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு – அமெரிக்காவின் சியாட்டில் நகர்மன்றம் தீர்மானம்

இதையடுத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வழிவகை செய்யும் வகையில், டிசம்பர் 31-ம் தேதி ஒரு நாள் சிறப்பு சட்டமன்றம் கூடுவதற்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளித்தார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு : சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த ஒடிசா தீர்மானம்

இந்நிலையில் இன்று கூடப்பட்ட கேரள சட்டமன்றத்தில், விவசாயச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

”விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, மூன்று விவசாயச் சட்டங்களும் திரும்பி பெறப்பட வேண்டும். இந்த சட்டங்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் உதவி செய்யும்” என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய சட்டங்களை திரும்ப பெற குடியரசு தலைவரிடம் காங்கிரஸ் மனு – தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி

விவசாயச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள பஞ்சாப், சட்டீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின் வரிசையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும் கேரள மாநிலமும் தற்போது இணைந்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்