Aran Sei

கேரள கன்னியாஸ்திரிகளை மிரட்டிய பஜ்ரங் தள்- குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமித் ஷா உறுதி

கேரள கன்னியாஸ்திரிகளை கட்டாயமதமாற்றம் செய்கிறார்கள் என மிரட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 19 அன்று ஈஸ்டர் விடுமுறையின் காரணமாக டெல்லியிலிருந்து ரூர்கேலாவுக்கு மதஉடையிலிருந்த இரண்டு கன்னியாஸ்திரிகளும் அவர்களுடன் சாதாரண உடையிலிருந்த இரண்டு தேவாலய பெண் ஊழியர்களும் ரயில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

கட்டாயமதமாற்றம் எனக்கூறி பஜ்ரங்தளம் போராட்டம் – ரயில்பயணத்தில் பாதிவழியில் இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள்

ஜான்சி ரயில்நிலையம் அருகில் ரயில் வந்துகொண்டிருந்தபோது, ரயிலில் ஏறிய பஜ்ரங் தள் உறுப்பினர்கள் அந்த இரண்டு பெண்களையும் கன்னியாஸ்திரிகள் கட்டாயமதமாற்றத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரச்சனையில் ஈடுபட்டார்கள்.

கன்னியாஸ்த்ரிகளை மிரட்டிய பஜ்ரங் தளம்: ‘சிறுபான்மையினரை நசுக்கத் தூண்டும் சங்க பரிவாரின் கொடூர பிரச்சாரத்தின் விளைவு’ – ராகுல் காந்தி

இந்நிலையில் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்டு காவல்துறையால் பரிசோதிக்கப்பட்ட கன்னியாயஸ்திரிகள் பின் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர், மேலும் பிரச்சனை ஏற்படும் அச்சம் உள்ளதால் மதஉடையை மாற்றிவிட்டு சாதாரண உடையில் பயணிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டனர்.

இந்த விவகாரம்கு றித்து கேரள கத்தோலிக்க அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். மேலும் அம்மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயனும் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு – 27 ஆண்டிற்குப் பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள அமித் ஷா , “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்