Aran Sei

கேரளா: சில்வர்லைன் ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் இடதுசாரிகளுக்கு எதிரானவர்கள் அல்ல – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கேரளாவின் வடக்கு – தெற்கு முனைகளுக்கு இடையே மணிக்கு 200 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் சில்வர்லைன் என்ற அதிவேக ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் இடது சாரிகளுக்கு எதிரானவர்களாக இருக்க வேண்டியதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில உதவிச் செயலாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் போது டெல்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டோம் – கேரள எம்பிக்கள் மக்களவையில் குற்றச்சாட்டு

இந்த திட்டத்திற்கு எதிராக கேரளா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 63,940 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவுள்ள இந்தத் திட்டம், கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டமாகும்.

கேரளாவின் தெற்கேவுள்ள திருவனந்தபுரத்திலிருந்து வடக்கேவுள்ள காசர்கோடு வரை 11 மாவட்டங்கள் வழியாக 529.45 கிமீ நீளத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் முடிவடைந்தால், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கே மணி நேரத்திற்குள் சென்றடைய முடியும்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை யூட்யூபில் வெளியிடுங்கள், வரிவிலக்கு எல்லாம் தரமுடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்

கேரளாவில் அமல்படுத்தப்படும் அதிவேக சில்வர்லைன் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்துக் கேள்வியெழுப்பிய பிரகாஷ்பாபு, இத்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான சில விஷயங்களை மாநில அரசு சரி செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டு கவுன்சில் கூட்டத்தில் அவர் கூறியுள்ளார்.

இத்திட்டம் குறித்துக் கேள்வியெழுப்பியவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து மக்களை நம்ப வைப்பதன் வழியாகத்தான் சில்வர்லைன் ரயில் திட்டத்தை நம்மால் செயல்படுத்த முடியும் என்று பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

ஷிவமொக்காவைத் தொடர்ந்து சாகர் நகர் – திருவிழாவில் இஸ்லாமியர்கள் கடை போட எதிர்ப்பு தெரிவித்த விஸ்வ ஹிந்து பரிஷத்

காங்கிரஸ், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) போன்ற அரசியல் கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிராக தனித்தனியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் அவசரம் காட்டுவதாகவும், அத்தகைய நடவடிக்கைகள் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இத்திட்டத்தை இன்றே செயல்படுத்த வேண்டும் என்று எந்த அவசரமும் இல்லை. அமைதியான சூழலில் தான் இத்திட்டத்தை நம்மால் செயல்படுத்த முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில உதவிச் செயலாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

ஜோமேட்டோவின் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் சாலை விபத்துகளுக்கே வழிவகுக்கும் – மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர்

சில்வர்லைன் திட்டம் தொடர்பாக கேரள அரசு ஆய்வு நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடியை கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் சந்தித்து பேசியுள்ளார்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்