Aran Sei

இணையத்தில் பரவும் கேரளா மருத்துவ மாணவர்களின் நடனம் – ‘லவ் ஜிகாத்’ என மிரட்டும் இந்துத்துவ அமைப்பினர்

கேரளாவை சேர்ந்த ஜானகி ஓம்கார் மற்றும் நவீன்.கே.ரசாக் என்ற இரண்டு மருத்துவ மாணவர்கள் ஆடிய காணொளி இணையத்தில் பரவி வந்தது.இந்நிலையில் அவர்களுக்கு எதிராக வலதுசாரி அமைப்பினர் லவ் ஜிகாத் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

கேரளாவை சேர்ந்த ஜானகி ஓம்கார் மற்றும் நவீன்.கே.ரசாக் ஆகிய இரு மருத்துவ மாணவர்கள் 1978 ஆம் ஆண்டு வெளியான போனி எம் ஹிட் ராஜ்புத்தின் பாடலுக்கு மருத்துவமனையில் நடனம் ஆடியிருந்தனர்.

” ‘லவ் ஜிகாத்’, மாட்டிறைச்சி குறித்து கருத்து சொல்ல முடியாது ” – நேர்காணலை விட்டு வெளியேறிய கேரள பாஜகவின் மெட்ரோமேன் ஈ ஶ்ரீதரன்

இந்தக் காணொளியை நவீன்.கே.ரசாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இந்தக் காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ரசாக் உடன் நடனம் ஆடிய ஜானகியின் பெயரை வைத்து மத அடிப்படையில் வலது சாரி அமைப்பினர் லவ் ஜிகாத் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

காதலர் தினம் – பாஜகவினர் “லவ் ஜிகாத்” தாக்குதல் : ” இது டிரெய்லர்தான், அடுத்த முறை கொன்று விடுவோம்”

இதுகுறித்து தெரிவித்துள்ள ஜானகி ஓம்கார், இது போன்ற கீழ்த்தனமான பேச்சையெல்லாம் கண்டு நான் கவலைபடவில்லை ” என்று தெரிவித்துள்ளார்.

source; telegraph

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்