Aran Sei

திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா மீது பாஜகவினர் தேசத்துரோக புகார் – முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

ட்சத்தீவைச் சார்ந்த திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் கைது நடவடிக்கையிலிருந்து விலக்களிக்கும் வகையில் முன்பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு – ஆயிஷாவுக்கு ஆதரவாக கட்சியிலிருந்து விலகிய பாஜகவினர்

திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா கேரள தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது, ஒன்றிய அரசு லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேபிரபுல் படேலை உயிரி ஆயுதமாக (bio-weapon) பயன்படுத்துகிறது என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆயிஷா சுல்தானாவின் மீது லட்சத்தீவுப் பகுதியின் பாஜக தலைவர் அப்துல் காதர் ஹாஜி 124 ஏ (தேசத்துரோகம்) மற்றும் 153 பி ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளித்திருந்தார்.

லட்சத்தீவுகளில் கொரோனா நிலைமைகுறித்து கருத்து தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர் – தேசத்துரோக வழக்கு பதிந்த காவல்துறை

இந்நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை விசாரித்த நீதிபதி அசோக் மேனன், ஆயிஷாவிற்கு எந்தக் குற்றப்ப்பின்னணியும் இல்லாததாலும், தான் கூறிய வார்த்தைக் குறித்து ஆயிஷா வருத்தம் தெரிவிப்பதாலும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

மேலும், அவர்  கூறிய கருத்தில்  தேசத்திற்கு  எதிராக வெளிப்படையான  எந்தக் கருத்தையும்  வெளியிடவில்லை, எந்தப்  பிரிவினரையும் இழிவுப்படுத்தும்  விதமாகவும்  பேசவில்லை  என்று  உயர்நீதிமன்ற அமர்வு  தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில்  தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்