Aran Sei

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைக்கு எதிராக மனு – தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி, தடுப்பூசி நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

த்திய அரசின் தடுப்பூசி கொள்கைகள் தொடர்பாக பதிலளிக்க தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பாரத் பயோடெக் ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தடுப்பூசிகளுக்கு இரட்டை விலை நிர்ணயித்ததை எதிர்த்து, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. முனீர் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சி.பி. பிரமோத் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அசோக் மேனன் மற்றும் முரளி புருஷோத்தமன் அடங்கிய அமர்வு, நோட்டீஸ் தொடர்பாக மே 4 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளின் விலையைக் குறைக்க வேண்டும் – சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை

மேலும், மனுக்களில் குறிப்பிட்டிருந்ததை போல தடுப்பூசி கொள்கைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், இதில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தடுப்பூசி கொள்கை எதிர்த்த முனீர், நாட்டு மக்களைப் பாதுகாப்பதில், மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரே மாதிரியான அரசியலமைப்பு கடமைகள் உள்ளன என வாதிட்டிருந்தார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்