லட்சதீவுகளை சேர்ந்த திரைக்கலைஞர் அயிஷா சுல்தானா மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என்றும், அரசு தரப்பு கூடுதல் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மலையாள செய்தி தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அயிஷா சுல்தானா, லட்சதீவுகள் மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு மருத்துவ ஆயுதத்தைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சத்தீவுகளின் பாஜக பிரிவு தலைவர் அப்துல் காதர் அளித்த புகாரில் பெயரில், அயிஷா மீது லட்சத்தீவு காவல்துறையினர் தேசத் துரோக வழக்கு பதிவு செய்தனர்.
நீதிக்கான நீண்ட பயணம் – நிரபராதி என்று நிரூபிக்க 12 ஆண்டுகளை சிறையில் கழித்த காஷ்மீரி
இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள அயிஷா, அவர்மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அசோக் மேனன், “இந்த வழக்கு ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இதனால் இதனை ரத்து செய்ய இயலாது. விசாரணை மேற்கொள்ள அரசு தரப்பிற்கு போதிய அவகாசம் அளிக்கப்பட வேண்டும். எனவே, விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் முடியாது” என தெரிவித்தார்.
விசாரணையின் முன்னேற்றம்குறித்து தெரிவிக்குமாறு லட்சத்தீவுகள் நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், அயிஷாவின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.