Aran Sei

மாநிலங்களவை தேர்தலை ஒத்திவைத்துள்ளது ஏன்? – தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கேரளா மாநிலத்தில் காலியாகவிருக்கும் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை ஒத்துவைத்து ஏன்? எனத் தேர்தல் ஆணையத்திடம் கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஷர்மா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்தக் கேள்வி எழுப்பியுள்ளது.

ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்கள் காலியாகவிருக்கும் நிலையில், அதற்கான தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் நடத்தபட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் ஏப்ரல் 21 தேதி தான் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பணியிடத்திலேயே கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்காத நீதிபதி பி.வி. ஆஷா, தேர்தல் அறிவிப்பை முன்னரே ஏன் வெளியிடவில்லை என்பது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 9 ஆம் தேதிக்குமுன் தாக்கல் செய்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகச் செயல்படுகிறது. தேர்தல் தேதி  ஏன் தள்ளிவைக்கப்பட்டது எனத் தெரிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை இருக்கிறது என மனுதாரர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நீதிமன்றத்தில், ”ராஜ்யசபா உறுப்பினர்களைத் தற்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களே தேர்தேடுக்கும் வகையில் தேர்தல் நடத்தப்படும்” எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Source : The Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்