Aran Sei

விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – கேரள அரசு நிறைவேற்றவுள்ளது

த்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். விவசாய சட்டங்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், போராடும் விவசாயிகளுக்கே தங்கள் ஆதரவு என்று கூறியுள்ள கேரள  அரசு, விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றவுள்ளது.

டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டம் – விவசாய சட்டங்களைக் கிழித்து எறிந்த அரவிந்த் கெஜ்ரிவால்

இது குறித்து, இன்று திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் “விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிடப்பட்டிருக்கும் நாளுக்கு முன், அதாவது டிசம்பர் 23 ஆம் தேதி ஒரு சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும். கேரளா , விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம், கேரள அரசு மத்திய அரசின் விவசாய சட்டங்களை அமல் செய்யாது என அம்மாநில விவசாய அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுனில் குமார், “ இந்த வாரத்திலேயே நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடுப்போம். புதிய சட்டங்களுக்கு மாற்றாக வேறு சட்டங்களை தான் அமல் செய்வோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய துறைகளில் மத்திய அரசு சட்டங்கள் இயற்றக் கூடாது. அது சட்டவிரோதமானது” என்று  அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்