Aran Sei

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: முதல்வர்களின் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்படுமென கேரள அரசு நம்பிக்கை

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக இதுவரை அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்றும் நடைபெறவுள்ள இரு மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தில் இந்த விவகாரம் மீண்டும் எழுப்பப்படும் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

இன்று (பிப்பிரவரி 23), கேரள சட்டப்பேரவையில் பேசியுள்ள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீரும் கேரளாவுக்கு பாதுகாப்பும் என்பதுதான் கேரள மாநில அரசின் நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு தண்ணீர் திறப்புக்கு கண்காணிப்புக் குழுவை அணுகுக – கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

“புதிய அணை கட்டுவது தொடர்பான விவாதத்தை தலைப்பைச் செயலாளர் மட்டக் கூட்டத்திலும், முதலமைச்சர்கள் கூட்டத்திலும் நாம் முன்வைத்திருந்தாலும், அது ஒருமித்த கருத்தை எட்டவில்லை. வரவிருக்கும் இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவான விவாதம் நடத்தி, இரு தரப்பினரும் ஏற்கும் வகையில் ஒரு ஒருமித்த உடன்பாட்டுக்கு வருவதற்கு கேரள அரசு முயற்சி எடுத்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில், தற்போது தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்படாமல் இருப்பதும், கேரள மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமும் அளிக்கப்படும்” என்று நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்