Aran Sei

‘சனாதன தர்மத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்’ – கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

ந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் வழியாக, இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் சனாதன தர்மத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்புர் மாவட்டத்தின் கலான் நகரில், நேற்று (மே 7) ஒரு பள்ளியைத் திறந்து வைத்து பேசியுள்ள ஆளுநர் ஆரிப் முகமது கான், “நம் நாட்டின் பழைய கலாச்சாரத்தை புதுப்பிக்க அனைவரும் உழைக்க வேண்டும். நாம் பின்னோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, சனாதன் கொள்கைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக. கல்வி இல்லாமல் இது சாத்தியமில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “மனித வாழ்வின் நோக்கம் அறிவை அடைவதே என்றும், பணிவு என்பது அறிவின் விளைவு என்றும் சுவாமி விவேகானந்தர் கூறி இருக்கிறார்” என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது குறிப்பிட்டுள்ளார்.

Source: ndtv

One Year Of DMK சாதனையா? சறுக்கலா? Ve Mathimaran Interview

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்