Aran Sei

வலுக்கும் எதிர்ப்பு: டெல்லி போராட்டத்தில் இணைந்த 400 கேரள விவசாயிகள்

த்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜஸ்தான், ஹரியானா எல்லைக்கு அருகே நடந்து வரும் போராட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த 400 விவசாயிகள் இணைந்துள்ளனர்.

புதிய விவசாய சட்டங்களை நீக்கக் கோரி, டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு ஆதரவு தெரிவித்து, நாடு முழுவதும் பலவிதமான போராட்டங்கள் நடந்து வருகிறன. அந்த வகையில், ராஜஸ்தான், ஹரியானா மாநில எல்லையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி – வரலாறு காணாத அரசு கொள்முதல்

இந்நிலையில், தற்போது கேரளாவிலிருந்து 400 விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளதாக ராஜஸ்தான் மாநிலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்ரா ராம் கூறியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜனவரி 16) அவர் பேசிய போது, “போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராஜஸ்தான் ஹரியானா எல்லையில் ‘சன்யுக்ட் கிசான் மோர்ச்சா’  விவசாய சங்கம் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறது. இதில் தற்போது கேரளாவிலிருந்து வந்த 400 விவசாயிகளும் இணைந்துள்ளனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘போராடும் விவசாயிகளை தேசவிரோதிகள் என்று சாயம் பூசும் மத்திய அரசு’ – சிவசேனா கண்டனம்

மேலும், “கேரளாவைச் சேர்ந்த விவசாயிகள் குழு நேற்று (ஜனவரி 15) ஆல்வாரின் ஷாஜகான்பூருக்கு வந்தது. பின்னர் இன்று (ஜனவரி 16) காலை போராட்டத்தில் அவர்கள் இணைந்தனர். இங்கு நடைபெறும் போராட்டத்தைப் பற்றி சொல்வதானால், இந்த நெடுஞ்சாலையின் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாயிகள் குவிந்துள்ளனர். அதேநேரம், உள்ளூர் மக்களின் போக்குவரத்திற்காக ஒரு பாதையும் திறக்கப்பட்டுள்ளது.” என்று அம்ரா ராம் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் கடுமையான குளிரில் போராடி வரும்போது, இதுகுறித்து மத்திய அரசு எந்த கவலையும் படாமல் இருக்கிறது என்று ராஜஸ்தான் மாநிலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்ரா ராம் விமர்சித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்