Aran Sei

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை எதிரொலி: மருந்து வாங்க குவியும் நிதி – முதல்வரோடு துணை நிற்கும் கேரள மக்கள்

மாநிலங்களுக்குத் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, தடுப்பூசிக்கான செலவை ஈடுகட்ட கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு, தடுப்பூசி செலுத்திக்கொண்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் நிதியளிக்க தொடங்கியுள்ளனர்.

நிதி செலுத்தியதற்கான சான்றிதழை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது வைரலாகி வருகிறது. பெரும்பாலும் இடது சாரி அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள இதில்,  கேரளாவுடன் நிற்கிறோம், தடுப்பூசிக்கு நன்கொடை போன்ற ஹேஷ் டாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

’கடன் வாங்கியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜனை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு’ – மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

இதுகுறித்து, பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இதுதான் இந்த மாநிலத்தின் சிறப்பாகும். வியாழகிழமை மாலை 4.30 மணிவரை, கொரோனா தடுப்பூசி எடுத்தவர்களிடமிருந்து ரூ .22 லட்சம் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு பங்களிப்பாக கிடைத்துள்ளது. ஒரு முக்கியமான கட்டத்தில் அரசுடன் மக்கள் நிற்க வேண்டிய மனப்பான்மையையே இது காட்டுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்