நாடார் கிறிஸ்தவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. தென்னிந்திய ஐக்கிய தேவாலய (எஸ்ஐயுசி) உறுப்பினர்களைத் தவிர்த்துள்ள அனைத்து நாடார் கிறிஸ்தவர்களும் இனி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இந்த முடிவு அமலுக்கு வரும் வகையில், கேரள மாநிலம் மற்றும் கீழ்நிலைப் பணி விதிகள், 1958-ல் திருத்தம் கொண்டு வர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கடந்தாண்டு பிப்ரவரி 6ஆம் தேதி, தென்னிந்திய ஐக்கிய தேவாலய (எஸ்ஐயுசி) உறுப்பினர்கள் நீங்கலாக உள்ள நாடார் கிறிஸ்தவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கேரள மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், ஒரு மாநில அரசுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என கூறி தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஓபிசி பட்டியலில் சேர்க்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கும் 127ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கேரள மாநில அரசு இப்புதிய முடிவை எடுத்துள்ளது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.