Aran Sei

கேரளா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கொலை வழக்கு – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் ஆனாவூரை சேர்ந்தவர் நாராயணன் நாயர் (வயது 52). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர், திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மகன் சிவபிரசாத், காட்டாக்கடையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் இந்திய மாணவர் அமைப்பின் வெள்ளறடை பகுதி செயலாளராக இருந்தார். சிவபிரசாத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதன பயங்கரவாத இயக்கங்களை உடனே தடை செய்ய வேண்டும் – திருமாவளவன்

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு ஒரு மர்ம கும்பல் சிவபிரசாத்தின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து அவரை கொலை செய்ய முயன்றனர்.

இந்த சம்பவத்தில் சிவபிரசாத் மற்றும் தடுக்க முயன்ற நாராயணன் நாயர், அவரது மனைவி விஜயகுமாரி மற்றும் சிவபிரசாத்தின் சகோதரன் கோபகுமார் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குச் சிகிச்சை பலனின்றி நாராயணன் நாயர் பரிதாபமாக இறந்தார்.

“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை நீக்குக, ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்க” – சீமான்

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளறடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் (46), அனில் (31), பிரசாத் குமார் (34), கிரீஷ்குமார் (40), பிரேம்குமார் (35), அருண்குமார் (35), பைஜூ(41), அஜயன் (32), சசிகுமார் (42), பினுகுமார் (42), கிரீஷ் (47) ஆகிய 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா கங்காதரன், குற்றம் சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளான ராஜேஷ், அனில், கிரீஷ்குமார் ஆகியோருக்கு தலா 1 லட்சம் அபராதமும், மற்ற அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Source : NDTV

ஏப்பத்துக்கு கூட வரி போடுவீங்களா? | GST தர முடியாதுனு மிரட்டும் மம்தா | Aransei Roast | BJP | GST

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்