Aran Sei

‘எதிரி பாஜகவை விடுத்து, சிபிஎம்-யை எதிர்க்கும் காங்கிரஸ்’ – குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்

கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலாளர் விஜயன் தாமஸ் பாஜகவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் தேசியத் தலைமையில் இருக்கும் தீர்க்கப்படாத பிரச்சனைகளும் கேரள காங்கிரஸில் இருக்கும் உட்கட்சி கோஷ்டி மோதல்களும்தான் காங்கிரஸில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 12), புதுடெல்லியில் பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் ஆகியோர் முன்னிலையில்  பாஜகவில் இணைவதற்கு முன்பு, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை விஜயன் தாமஸ் சந்தித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“காங்கிரஸில் என்ன நடக்கிறது என்று தெரியுமா? தேசிய அளவில் பார்த்தால், ஒரு பிராந்திய கட்சிக்கு இருக்கும் பலம் கூட காங்கிரஸுக்கு இல்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜி- 23 என்ற குழுவை உருவாக்கியுள்ளனர். பின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கட்சியில் யார் இருப்பார்கள்? மாநில காங்கிரஸ் கமிட்டிகளில் கூட, இது போன்ற பிரச்சனைகள்  மோசமாக உள்ளன. நான் காங்கிரஸிலிருந்து வெளியேறுவது தொடக்கம்தான். சாக்கோ கூட காங்கிரஸில் இருந்து வெளியேறினார்.கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியில் இரு கோஷ்ட்டிகள்தான் பிரச்சனைகளை உருவாக்குகிறன. அந்த இரு கோஷ்ட்டியால் பலர் வேதனையடைந்துள்ளனர்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக அச்செய்தி தெரிவித்துள்ளது.

நீதி குறித்து கேரளாவிற்கு பாடம் எடுக்காதீர்கள் அமித்ஷா – பினராயி விஜயன் பதிலடி

காங்கிரஸை விட்டு வெளியேறி, பாஜகவில் இணைந்தது தேர்தல் சீட்டிற்காகதான் என்ற கருத்தை முழுவதாக மறுத்த விஜயன் தாமஸ்,  “எங்களுக்கு சில கொள்கைகள் உள்ளன. நான் திருவனந்தபுரத்துக்கான ஒருங்கிணைப்பாளராகவும், நேமம் தொகுதியின் பொறுப்பாளராகவும் பணிபுரிந்தேன். இப்போது அங்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் வேலை செய்துக்கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸின் முக்கிய எதிரி பாஜகதான். எல்லா மாநிலங்களிலும், நாங்கள்  (காங்கிரஸ்) பிராந்தியக் கட்சிகளைவிட கீழே இருக்கிறோம். ஆனால் இப்பிரச்சனைகள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இவற்றைக் கேட்கவும் யாரும் தயாராக இல்லை.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்