நாட்டு மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டதாகவும், அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசானது பகிரங்கமான போராட்டங்களை நடத்தியிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நேற்று (மார்ச் 26), அம்மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய பினராயி விஜயன், “நாட்டு மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவே சிஏஏ கொண்டு வரப்பட்டது. இவையெல்லாம் மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகும். நம் நாட்டில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வருபவர்களை, இப்போது வாழ உரிமை இல்லை என்று கூறுகிறார்கள். நாடு முழுதும் சிஏஏ கொண்டுவரப்பட்டால் எல்டிஎஃப் அரசானது கேரளாவில் இதைச் செயல்படுத்தாது. இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.” என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மேலும், “கேரள சட்டபேரவை தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், இந்த நாடு இப்போது சிக்கியிருக்கும் சூழ்நிலைதான். நாட்டில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும், நாட்டில் மதச்சார்பற்ற பதிப்பீடுகளை பலவீனப்படுத்தவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. நாட்டில் மதச்சார்பின்மையை நிலைநிறுத்த விரும்புவோர் கேரளா தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.
Source : ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.