Aran Sei

‘மத்திய விசாரணை அமைப்புகள் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றன’ – பிரதமருக்கு, பினராய் விஜயன் கடிதம்

Image Credits: New Indian Express

த்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் தொடர்ந்து விசாரணை என்கிற பெயரில் மாநில அரசுகளின் மரியாதைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதை பிரதமர் நரேந்திர மோடி தடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். இது கூட்டாட்சி மனப்பான்மையை கெடுக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாகக் கேரள முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்தத் தருணத்தில் ஐக்கிய அரபு  அமீரக நாடுகளின் தூதரகத்துடன் தொடர்புடைய, தங்க கடத்தல் வழக்குகளில் நடத்தப்படும் விசாரணைகள் திட்டமிட்டு கேரள அரசைத் தவறாகச் சித்தரிக்கும் நோக்கோடு செய்யப்படுகிறதோ எனும் சந்தேகத்தை எழுப்புகின்றது” என்று கூறியுள்ளார்.

“வழக்கை முடிப்பதற்கான ஆர்வத்தை இந்த அமைப்புகள் இழந்துவிட்டன. ஜூலை முதல் அவர்கள் விசாரணையை நடத்தவில்லை. ஆனால், தற்போது இந்த விசாரணைகள் கேரள அரசின் தலைமையை இழிவுபடுத்துவதற்கான ஒரு திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தின் பகுதியாக மாறியுள்ளது” என்று பினராய் தெரிவித்துள்ளார்.

“குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறுவதில் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் வெளியிடுவது மற்றும் சம்மன்கள் வழங்கப்படுவதற்கு முன்பே அவற்றை வெளியிடுவது போன்ற ஊடகங்களின் நடவடிக்கைகள், இவ்விவகாரத்தில் சுங்க வரித் துறை மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் சில அதிகாரிகளுக்குத் தொடர்புடையதாய் காட்டுகிறது” எனப் பினராய் விஜயன் கூறியுள்ளார்.

கூட்டாட்சி அமைப்பில், அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பு விதிகளை மீறியுள்ளதாகக் கூறி கேரள முதல்வர் இந்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கேரள உள்ளாட்சி தேர்தல் : மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி – பினராயி விஜயன்

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதன் பின்னர், மத்திய-மாநில உறவை வரையறுக்கும் கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை பற்றி, பினராய் விஜயன் மோடியிடம் கடிதம் மூலம் எடுத்துரைத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்