Aran Sei

‘சொந்த கட்சியின் பணத்தையே திருடிய கேரள பாஜக; அவிழும் உண்மைகள் – ராஜீவ் ராமச்சந்திரன்

‘குழல் அடி’ என உள்ளூர் காவலர்கள் மொழியில் அழைக்கப்படும் சட்டவிரோதமாக கைமாற்றிய (ஹாவாலா) பணத்தையே திருடுவது என்பது  கேரளாவின் திருச்சூர் மற்றும் பாலக்காடு   காவல்துறையினருக்கும், ஊடகங்களுக்கும் புதிய செய்தி அல்ல. மலையாளத்தில் “குழல் பணம்” என கூறப்படும் இந்த ஹவாலா பணமாற்றம் பெரும்பாலான மாவட்டங்களில் நடப்பது பொதுவானதுதான். சில போக்குவரத்து வசதிகள் காரணமாக தேசிய நெடுஞ்சாலை 544 (முன்பு தே. நெ. 47) ன் குதிரன்- அங்கமாலி பகுதியில்தான் பெரும் அளவிலான இந்த திருட்டு நடப்பதாக வரலாறு கூறுகிறது.

இதனை நடத்தும் கும்பல்கள் தங்களுக்குத் துப்புக் கொடுக்கப்பட்ட வாகனத்தைத் துரத்தி, விபத்தை ஏற்படுத்தி, பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு தப்பி ஓடிவிடுவதுடன் கதை முடிந்து விடும். களவாடிய பணம் சட்டவிரோதமானது என்பதால் கடுமையான காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் ஒழிய அதுபற்றி எந்த புகாரும்  கொடுக்கப்படாது. இதில் சில சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கும் பங்குண்டு என்பது உலகறிந்த ரகசியம்.

பாலஸ்தீன பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் இஸ்ரேலியப் படையினர்- 2 பாதுகாப்பு படையினர் உட்பட மூன்று பாலஸ்தீனர்கள் மரணம்

ஆனால், 2021, ஏப்ரல் 3 ம் தேதி  திருச்சூர், கொடக்கராவில் நடந்த ஹவாலாப் பணத் திருட்டு, காவல்துறை மற்றும் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது மட்டுமல்ல, மாநில பாஜக தலைமை எடுத்து வைத்த தவறான அடிகளால் கூர்மையான அரசியல் திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வழக்கமான திரைக்கதை, வசனம் போலவே ஹவாலா பணத்தை எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிச் சென்ற காரை ஒரு கும்பல்  கொட்கராவில்  விரட்டிப்பிடித்து, ஒரு சிறு விபத்தை ஏற்படுத்தி, பணத்தையும் கொள்ளை அடித்து விட்டுத் தப்பி ஓடிவிட்டது‌.

ஆனால், வழக்கமான நடைமுறை போலன்றி இம்முறை காரின் உரிமையாளரான சம்ஜீர் சம்சுதீன்,  ஒன்பது பேரைக் கொண்ட ஒரு கும்பல் தங்களிடமிருந்து ரூபாய் 25 லட்சத்தைக் கொள்ளையடித்து விட்டுக் சென்றுவிட்டதாகப் புகார் அளித்து விட்டார்.   எனினும் காவல்துறை விசாரணையில் புகார்தாரருக்கு  தர்மராஜன் என்பவர் பணத்தை அளித்ததாகவும், காரில் 3.5 கோடி ரூபாய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்ட போதுதான் இதில் பாஜகவின் தொடர்பு வெளியே வந்தது. இந்தப் பணம் கேரளத் தேர்தலுக்காக பல்வேறு மாவட்டங்களுக்குக் கொடுக்க கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தர்மராஜன் மூலம் தெரியவந்துள்ளது.

உபா சட்டத்தில் சிறுவன் கைது – தன் இயலாமையால் குழந்தைகளிடம் ’வீரத்தைக்’ காட்டுகிறதா அரசு?

பணம் கொள்ளையடிக்கப்பட்ட உடன் நடந்த தர்மராஜனின் தொலைபேசி உரையாடல்கள் அவனுக்கும் தேசிய கட்சி மற்றும் மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரனின் மகன் கே.எஸ். அரிகிருஷ்ணனுக்கும் உள்ள‌ தொடர்பை வெளிப்படுத்துகிறது. முதலில் ஊடகங்கள் எந்த அரசியல் கட்சி இதில்  ஈடுபட்டுள்ளது எனக் குறிப்பிடாமல் ஒரு தேசிய கட்சியின் மீது ஐயமிருப்பதாகவே எழுதின. காவல்துறை பாஜக தலைவர்களை  விசாரணைக்கு அழைத்த போதுதான் பாஜகவுடனான தொடர்பு வெளிப்படையாகத் தெரிந்தது. தொடர் விசாரணைகளால் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஏப்ரல் 2ம் நாள் பணம் கொண்டு வருபவர்களுக்கு திரிச்சூரில் தங்கும் வசதியை ஏற்பாடு செய்திருந்தது தெரிய வந்தது.

இந்தக் கும்பலைப் பற்றியத் துப்பும் கூட மாவட்ட பாஜக தலைவர்களின் ஒரு பிரிவினரிடமிருந்தே வந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அந்தக் கோணத்திலும் தற்போது விசாரணை நடக்கிறது. பிபிஎம் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான தாமஸ் ஐசக்,” இது நீரில் மிதக்கும் பனிப்பாறையின் முகடு தான்” என்று கூறுகிறார். காவல்துறை இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 412,212,120(ஆ) ஆகியவற்றின் கீழ் குற்றவளிகள் மீது குற்றம் சாட்டியுள்ளதாகவும், சிறப்பு குற்றப் பிரிவு காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது. “மாநில காவல்துறை 96 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்‌. 3.5 கோடியில் 1.12 கோடியையும், இந்தப் பணத்தைப் பயன்படுத்தி வாங்கியுள்ள  347 கி. தங்கத்தையும் கைப்பற்றி உள்ளனர்.” என முதலமைச்சர் பினராய் விஜயன் சட்டமன்றத்தில் எதிர்கட்சியான காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்தி வைப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

எதிர்கட்சிகள் ஒன்றிய முகமைகளால் நடத்தப்படும் தங்கக் கடத்தல் விசாரணையை சுருட்டி வைத்து விடுவதற்காக, ஆளும் இடது சாரி ஜனநாயகக் முன்னணி  இந்த வழக்கில் சமரசம் செய்து வருவதாகக் கூறுகிறது. கேரள பாஜக தலைவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையும், அரசும் இந்தச் சட்டவிரோத பணத்தின், ஆதாரத்தையும் விநியோகத்தையும் திறம்பட ஆய்வு செய்கிறதா என நாங்கள் சந்தேகிக்கிறோம்,” என்கிறார் எதிர்கட்சி தலைவர் வி.டி‌. சதீசன்.

மறுபுறம் பாஜக,  கேரளாவில் கட்சியின் புகழுக்கு! இழுக்கு சேர்க்க அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகக் கூறுகிறது. ” ஏப்ரல் 3ம் நாள் ஒரு தொழில் அதிபரின் பணம் தர்மராஜன் என்பவரிடம் கொடுக்கப்பட்டு கொடைக்கானலில் தேர்தல் பரப்புரைக்கான பொருட்களை வாங்குவதற்காக விநியோகம் செய்யக் கொடுக்கப்பட்டது. அவர் தற்போது புகார் கொடுத்துள்ளார். திருடனைக் கண்டுபிடித்து பணத்தை மீட்பதற்குப் பதில் பணத்தை இழந்தவர் பாஜக – ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்பதற்காகவே காவல்துறை எப்படியாவது இதனை பாஜகவுடன் தொடர்பு படுத்த ஆராய்ச்சி செய்து வருகிறது,” என்று  பாஜக கூறுகிறது.

பாஜக அரசால் வீழ்த்தப்பட்ட செங்கல்பட்டு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் வரலாறு – சூர்யா சேவியர்

இந்த ஹவாலா பணத்திருட்டு நிகழ்வு பாஜக தலைமைக்கு மிகப்பெரிய உதைக் கொடுத்துள்ளது‌. அதிலும் குறிப்பாக, ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் ஓரளவு கை நிறைய இடங்களை வெற்றி பெறலாம் என கனவு கண்டு கொண்டிருந்த நிலையில், முட்டை வாங்கி, துயரத்தில் இருக்கும், மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன் மற்றும் ஒன்றிய அமைச்சர் வி. முரளிதரன் ஆகியோருக்கு இது மிகப்பெரிய அடியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சுரேந்திரனின் வேதனையை மேலும் அதிகமாக்க அவர் மீது ஹவாலா பணம் தொடர்பாக மேலும் இரண்டு புகார்கள் வெளிவந்துள்ளன. ஜனாதிபத்திய ராஷ்ட்ரிய கட்சியின் (JRP) மாநிலப் பொருளாளர் பிரசித்த அழிக்கோட் என்பவர் 2014 பொதுத் தேர்தலுக்குப்பின் தேசாய் ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி உள்ள பழங்குடி மக்கள் தலைவர் சி.கே. ஜானுவுக்கு பத்து லட்ச ரூபாய் கொடுத்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.

வெளியே கசிந்துள்ள சரேந்திரனுக்கும், பிரசித்தாவுக்கும் இடையே நடந்த தொலை பேசி உரையாடலில், ஜானு பத்து கோடி ரூபாய் கேட்டதாகவும், இறுதியில் அதில் ஒரு விழுக்காடான பத்து லட்சத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. சுல்தான் பத்தேரி தொகுதியில் போட்டியிட்ட ஜானு ஒருங்கிணைந்த ஜனநாயகக் கூட்டணி மற்றும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை விட மிகக் குறைந்த வாக்குகள் பெற்று மூன்றாமிடமே பெற்றவர். கே. சுந்தரா என்ற ஏறத்தாழ சுரேந்திரா என்ற பெயருடன் ஒன்று படும் பெயர் கொண்ட ஒரு வேட்பாளர் மன்ஜேஸ்வரா தொகுதியில் தனது வேட்புமனுவை  திரும்பப் பெற்றுக் கொள்ள இரண்டு லட்ச ரூபாயும் ஒரு திறன் கைப்பேசியும் கையூட்டாகப் பெற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். பிபிஎம் வேட்பாளர் வி.வி. ரமேஷன் என்பவர் கொடுத்துள்ள புகாரின் பேரில் காசர்கோடு மாவட்டத்தின் படியாடுக்கா காவல்நிலையத்தில்  சுரேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்லா எனும் மாமனிதனும், எடிசன் என்ற சூழ்ச்சிக்காரனும் – கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

” இந்த குற்றச்சாட்டுகள் உண்மையானால் அவை தேசத் துரோகத்திற்கு இணையானவை,” என்கிறார் ஆர்எஸ்எஸ்ஸின் முன்னாள் தலைவர் பி.பி. முகுந்தன். அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கட்சியின் தேசியத் தலைமை சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். கேரள பாஜகவின் முன்னாள் தலைவர் சி.கே பத்மநாபன் உலக சுற்றுச்சூழல் நாள்  நிகழ்ச்சி ஒன்றில், சுரேந்திரன் பற்றி வஞ்சப்புகழ்ச்சியாக,” உப்பைத் நின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்,” என்று கூறியுள்ளார். அப்போது அவர், நமது சுற்றுச்சூழல் மட்டுமல்ல நமது அரசியலும் கூட மாசடைந்துள்ளது என்று மேலும் கூறினார். பத்மநாபன் முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு எதிராக தர்மதோம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் உயர்மட்டத் தலைவர்கள் இந்த நிகழ்வுகள்குறித்து கவலை அடைந்திருப்பதுடன் தங்கள் சொந்த விசாரணையைத் துவங்கி உள்ளனர்.  சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஓய்வுபெற்ற மூன்று அரசு அதிகாரிகளான இ. ஸ்ரீதரன், ஜேக்கப் தாமஸ், சி.வி. அனந்தபோஸ் ஆகியோர், அண்மை நிகழ்வுகள் மற்றும் பாஜகவின் படுதோல்வி குறித்த ஒரு அறிக்கையைக் கொடுத்துள்ளனர். இந்தத் தனித்தனியான அறிக்கைகள் தற்போதைய மாநில தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

“தங்கள் தலைவர்களை பழிவாங்க முயற்சிக்கும் கேரள காவல்துறைக்கு இந்த விசாரணையை மேற்கொள்ள எந்தவித தலையீட்டு உரிமையோ, அதிகாரமோ இல்லை. ஏனெனில், இந்த வழக்கு ஒன்றிய அமலாக்கத்துறையால் மட்டுமே விசாரிக்கத் கூடிய பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருகிறது” என்று கூறுவது மட்டுமே தற்போது பாஜகவின் ஒரே தற்காப்பாக உள்ளது.

ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்

எனினும், பினராய் விஜயன் மத்திய புலனாய்த்துறை கேட்ட உடனேயே காவல்துறை இந்த வழக்குத் தொடர்பான விவரங்களை அமலாக்கத் துறைக்கு அளித்துவிட்டதாகக் கூறி உள்ளார். ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்திறகெ பதிலளித்த விஜயன், அமலாகாகத்துறை மே 27 அன்று தகவல்களை கேட்டது. காவல்துறை ஜூன் ஒன்றாம் தேதி அவற்றைக் கொடுத்துள்ளது என்று கூறி உள்ளார். பந்து தற்போது ஒன்றிய முகமைகளின் பக்கம் உள்ளது. இது ஏற்கனவே இடதுசாரி ஜனநாயகக் முன்னணி தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐயத்தின் நிழல் படிந்துள்ள, தீவிரமாக நடந்து வரும் தங்க கடத்தல் வழக்கின் மீது ஐயத்தை எழுப்புகின்றது. இந்த வழக்கு பணம் கொள்ளையடித்தல் தொடர்பாகவும், அதனை வேட்பாளருக்கு தருவதற்காக கணத்தப்பட்டதுப் கேரள  காவல்துறையின் அதிகார எல்லைக்கு உட்பட்டது. அதனால் கே. சுரேந்திரனும், பாஜக தலைவர்களும் இன்னும் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்விலேயே இருக்கின்றனர் என்பதே உண்மை.

www.thewire.in இணைய தளத்தில் ராஜீவ் ராமச்சந்திரன் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்