Aran Sei

கேரளா: இஸ்லாமியர் என்பதால் பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் கோயில் நடன நிகழ்ச்சிக்கு தடை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் நிகழ்வில் இஸ்லாமியரான பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் நடன நிகழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது.

திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயில் 10 நாள் திருவிழாவிற்குத் தயாராகி வருகிறது, இதில் சுமார் 800 கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இக்கோயில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்துங்கள் – பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து

ஏப்ரல் 21 அன்று கோயில் வளாகத்தில் பரதநாட்டிய கலைஞர் மான்சியா நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதால், அவரது நிகழ்ச்சியை நடத்த முடியாது என கோயிலின் அலுவலக அதிகாரி ஒருவர் மான்சியாவிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது பரதநாட்டியத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் மான்சியா, தனக்கு எந்த மதமும் இல்லை என்று பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் இசைக்கலைஞரான ஷியாம் கல்யாண் என்ற இந்துவைத் திருமணம் செய்துள்ளார்.

கர்நாடகாவில் தொடங்கியது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – ஹிஜாபுடன் வந்தால் தேர்வு எழுத முடியாது என அரசு அறிவிப்பு

“நான் ஒரு நல்ல நடனக் கலைஞரா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல், ஒவ்வொருவரின் மதத்தின் அடிப்படையிலேயே அனைத்து நிகழ்ச்சிகளும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனது திருமணத்திற்குப் பிறகு நான் ஒரு இந்துவாக மாறினேனா? என்ற கேள்வியையும் அப்போது எதிர்கொண்டேன். எனக்கு எந்த மதமும் கிடையது, இந்நிலையில் நான் எங்குச் செல்வது” என்று தனது பேஸ்புக் பதிவில் மான்சியா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்விற்கு முன்னரே திருச்சூரில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலில் மான்சியா ஒரு இஸ்லாமியர் என்பதால் இதே மாதிரி நடன நிகழ்ச்சியையே நடத்த விடாமல் தடுத்துள்ளனர்.

கர்நாடகா: ‘சலாம் மங்களராத்தி’ சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத்

“கலையும் கலைஞர்களும் சாதி, மதத்தால் பின்னிப்பிணைந்துள்ளனர். ஒரு மதத்திற்குத் தடை விதிக்கப்பட்டால், அது மற்றொரு மதத்தின் ஏகபோகமாக மாறுகிறது. இந்த அனுபவம் எனக்குப் புதிதல்ல. நமது மதச்சார்பற்ற கேரளாவில் எதுவும் மாறவில்லை என்பதை இங்கே நினைவூட்டுவதற்காகவே நான் அதை பேஸ்புக்கில் பதிவு செய்கிறேன்” என்று மான்சியா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்