Aran Sei

உணவு உரிமையில் தலையிடும் வலதுசாரிகள் : பின்வாங்கிய ‘பேக்கிரி’ நிர்வாகம்

கேரளா மாநிலம் குருமசேரியில் உள்ள ஒரு பேக்கரி, ‘ஹலால்’ உணவு விற்கப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த அறிவிப்பை அகற்ற கோரி பேக்கரி நிர்பந்திக்கப்படுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘மோடி’ என்று பெயர் சுடப்பட்டுள்ள இந்தப் பேக்கரி ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28 அன்று இந்து ஐக்கிய வேதியின் பரக்கடவ் பிரிவு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து ஸ்டிக்கரை (‘ஹலால்’ உணவு கிடைக்கும் எனும் அறிவிப்பு) அகற்ற வேண்டிய கட்டாயம் இந்தப் பேக்கரிக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் தலைவர் அருண் அரவிந்த் மற்றும் செயலாளர் தனேஷ் பிரபாக்ரன் கையெழுத்திட்ட நோட்டீஸ் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

‘ஹலால்’ உணவை விளம்பரப்படுத்தும் ஸ்டிக்கர் மதத்தின் அடிப்படையில் உணவைப் பாகுபடுத்துவதைக் குறிக்கிறது என்று நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இது, தீண்டாமைக்கு ஒப்பானது, எனவே இது ஒரு குற்ற செயல் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் ‘ஹலால்’ ஸ்டிக்கர் அகற்றப்பட வேண்டும், எதிர்காலத்தில் இது போன்ற பாகுபாடான விளைபரங்களை செய்யக் கூடாது. இல்லையெனில், ஐக்கிய வேதி கடையைப் புறக்கணித்துப் போராட்டங்களை நடத்தும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீசை பெற்றவுடன் பேக்கரி இந்த ஸ்டிக்கரை அகற்றியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் : ஜனநாயகத்திற்கு ஆதரவளிப்பதாகப் பேசிய பாஜக எம்எல்ஏ

இந்த வாரத் தொடக்கத்தில், அரவிந்த் மற்றும் ஒரு சிலரும் சிற்றுண்டி பெறுவதற்காக இந்தப் பேக்கரிக்கு வந்துள்ளனர். அப்போது, அவர்கள் ஹலால் அல்லாத உணவு வேண்டும் என்று கூறியுள்ளனர். ‘ஹலால்’ உணவு மட்டுமே கிடைக்கும் என்று அவர்களிடம் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

‘ஹலால்’ உணவை விற்பதால்தான் அதிகம் கூட்டம் வருகிறது என்று பேக்கரியின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தி இந்து கூறியுள்ளது. “உள்ளூர்வாசிகள் மட்டும் இல்லாமல், சுற்றுலாவாசிகளும் இங்கு உணவைப் பெறுவார்கள். இது அவர்களின் தேவையையும் பூர்த்தி செய்கிறது” என்று கடையின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

“இந்தக் கடை பெரும்பாலும் பேக்கரி பொருட்களை விற்கிறது. அல்-ஃபாம், ஷவர்மா மற்றும் கோழியைக் கொண்டு செய்யப்படும் இரண்டு வகை உணவுகளை விற்கிறது, இவை ‘ஹலால்’ வகையின் கீழ் தான் வருகின்றன” எனவும் பேக்கரியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்