Aran Sei

கொரோனவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை சரிசெய்ய 100 நாட்கள் செயல்திட்டம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

Image Credits: The Week

கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடுகட்ட 100 நாட்கள் மாநில அளவிலான செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தரவரிசை அட்டவணையில் பஞ்சாப்,தமிழ்நாடு ,கேரளா முன்னிலை – எட்டாம் இடம் பெற்று பின்னடைவை சந்தித்த குஜராத்

இந்த திட்டம் நேற்று ஜூன் 11 முதல் வரும் செப்டம்பர் 19 வரை 100 நாட்களுக்கு செயல்டுத்தப் படவுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், “சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துதல் மற்றும் தரமான வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகிய மேம்பாட்டிற்காக உதவும் வகையில் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்” என்று பினராயி விஜயன் கூறியுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா இரண்டாம் அலையில் அதிகளவில் தொற்றுக்குள்ளாகும் பழங்குடியினர்கள் – 3.59% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

இந்த திட்டத்தின் படி , 77,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 2,464.92 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் திறன்மேம்பாடு ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வங்கியில் அறிவு-சார் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வறுமை ஒழிப்பு,பொருளாதார மற்றும் சமூக வேற்றுமைகளை களைதல், சூழலுக்கு ஏற்ற திட்டங்கள் மற்றும் ஆரோக்கியமான நகர்ப்புற வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்