Aran Sei

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கொரோனா பரிசோதனை மையங்கள்: நடவடிக்கை எடுக்க பினராயி விஜயன் உத்தரவு

credits : PTI

கேரளாவில், கொரோனா தொற்றை உறுதி செய்யும் ஆர்டி பிசிஆர் பரிசோதனைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அல்லது மக்களைத் திரும்ப அனுப்பும் பரிசோதனை மையங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘தடுப்பூசி கேட்டு இந்திய அதிகார வர்க்கம் மிரட்டுவதாகப் புகார்’ – அழுத்தத்தின் காரணமாக லண்டன் சென்ற அதார் பூனாவாலா

இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ”சில தனியார் மையங்கள் ஆர்டி பிசிஆர் பரிசோதனைக்கு, நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், மருத்துவ சோதனை செய்ய வரும் மக்களைத் திரும்ப அனுப்புவதாக புகார்கள் வருகின்றன. இது லாபம் பார்க்க வேண்டிய நேரம் இல்லை. மக்களுக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என பதிவிட்டுள்ளார்.

கேரள அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தனியார் பரிசோதனை மையங்கள் மக்களைத் திரும்ப அனுப்பாமல், நிர்ணயிக்கப்பட்ட விலையான 500 ரூபாய்க்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்டில் உச்சமடையும் கொரோனா உயிரிழப்புகள் – பறிதவிக்கும் மக்கள்

மேலும், இதனை மீறும் பரிசோதனை மையங்கள்மீது, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, கேரள தொற்றுநோய்கள் அவசரச் சட்டம் 2020 மற்றும்  உரிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்