Aran Sei

கேரளாவில் கொரோனா இரண்டாம் அலையில் அதிகளவில் தொற்றுக்குள்ளாகும் பழங்குடியினர்கள் – 3.59% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

கேரளாவில் மொத்த பழங்குடியின மக்கள் தொகையில், 3.59% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,கடந்த சிலமாதங்களாக, கொரோனா தொற்றால் பழங்குடியின மக்கள் அதிகளவில்  பாதிக்கப்பட்டு வருவதாகவும்  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்,கடந்த ஜனவரி மாதத்தின் இறுதி வரை, 3000 பழங்குடியினர்கள் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மே 31 வரை 17,401 பழங்குடியினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முகாமுக்கு எதிராக போராடிய பழங்குடியினர் மூவர் உயிரிழப்பு – 1000 பழங்குடிகள் ஒன்றிணைந்து வலுக்கும் போராட்டம்

கேரளாவில் மொத்தமாக 4.84 லட்சம் பழங்குடியினர் வசித்து வருவதாக கடைசியாக நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் வழியாக அறியமுடிவதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கேரளாவில் மொத்தமாக 8,815 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளதாகவும், அதில் 146 பேர் பழங்குடியினர் என்றும், ஜனவரி மாதத்தின் இறுதி வரை 35 பழங்குடியினர் மட்டுமே கொரோனா தோற்றால் இறந்திருந்ததாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

பழங்குடியினர் உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியைப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் குழு – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மேலும், பழங்குடியின மக்களின் மொத்த மக்கள் தொகையில் 40% பேர் வசிக்கக்கூடிய அட்டப்பாடி பகுதியில், 2259 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 816 பேர் பழங்குடிகள் என்றும், கொரோனா தொற்றால் உயிரிழந்த 23 பேர் 5 பழங்குடியினர்கள் இறந்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் ,74,000 பழங்குடியினர்களுக்கு முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக பழங்குடியினத் துறையினர் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்