Aran Sei

’டெல்லியில் ராமராஜ்யம் அமைக்க போராடி வரும் ஆம் ஆத்மி’ – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

ம் ஆத்மி அரசு டெல்லியில் ராமராஜ்யம் அமைப்பதற்காகக் கடந்த ஆறு வருடமாக முயன்று  வருகிறது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் கூறியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று டெல்லி சட்டசபையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “நான் பெரிய அனுமன் பக்தன், தினமும் அனுமன் துதிகளை பாடுவேன். கடந்த ஆறு வருடமாக ராமராஜ்யம் அமைக்க டெல்லி அரசு போராடிவருகிறது” என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி கலவரத்தில் அமித்ஷாவின் தொடர்பு? – வழக்கறிஞரின் அலுவலகத்தில் மீண்டும் மீண்டும் போலீஸ் சோதனை

கடந்த பிப்ரவரி 2020 வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம்குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது சட்டசபையில் கெஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு முதியோர்கள் ராமர் கோவிலுக்குச் செல்ல இலவச தீர்த்த யாத்திரை திட்டம் தொடங்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

டெல்லி கலவரம் – முஸ்லீம்களை தாக்க கலவரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதா?

ராமராஜ்யம் அமைப்பது குறித்து பேசிய கெஜ்ரிவால், ராமரின் ஆட்சியின்போது மக்கள் கவலை இல்லாமல் இருந்ததாகவும் அப்போது மக்களுக்கு அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைத்ததாகவும், அதுதான் ராமராஜ்யம் என்றும் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி கலவரம் எவ்வாறு திட்டமிடப்பட்டது? – விரிவான புலனாய்வின் இரண்டாம் பகுதி

மேலும் பேசிய கெஜ்ரிவால், ராமராஜ்யத்தின்போது மக்கள் சாதி வேற்றுமையற்று சமத்துவமாக இருந்தார்கள் என்றும், அது போன்றதொரு ராமராஜ்யம் அமைக்கவே டெல்லி அரசு போராடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

டெல்லி அரசின் 10 கொள்கை முடிவுகளில் ராமராஜ்யம் அமைப்பதையே இலக்காக வைத்திருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்