ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நான்கு காஷ்மீரி விற்பனையாளர்கள் தாக்கப்பட்டதுடன், ‘பாகிஸ்தான் ஒழிக’ என்றும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் முழக்கமிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, பிலால் அகமது, ஷபீர் அகமது, வாசிம் அகமது ஆகிய நான்கு காஷ்மீர் விற்பனையாளர்களுடைய புகாரின் பேரில் டோராண்டா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் தகவலின்படி, இரண்டு நாட்களுக்குள் ராஞ்சியை விட்டு வெளியேற வேண்டும் அல்லது மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காஷ்மீர் விற்பனையாளர்களை குற்றம்சட்டப்பட்ட குழுவினர் மிரட்டியுள்ளனர்.
டோராண்டா பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வாடகை வீடுகளில் தங்கி கம்பளி ஆடைகளை விற்பனை செய்து வருவதாகவும், ஆனால் தற்போது உள்ளூர்வாசிகள் சிலர் ஊரை விட்டு வெளியேறுமாறு மிரட்டி வருவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் நடராஜன் மறைவு – தலைவர்கள் அஞ்சலி
“நான் டோராண்டாவில் உள்ள ஹதிகானா பகுதிக்கு சென்றபோது, சோனு என்ற உள்ளூர்காரர் எங்களை வழிமறித்து பாகிஸ்தான் ஒழிக என்றும் ஜெய் ஸ்ரீராம் என்றும் முழக்கமிட கட்டாயப்படுத்தி, ஆயுதத்தால் தாக்கினார். நான் ஏன் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட வேண்டும் என்று கேட்டபோது, அவர்கள் எங்களை மீண்டும் தாக்கத் தொடங்கினர். எங்களை காஷ்மீருக்குத் திரும்பிப் போகச் சொன்னார்கள். எங்களில் ஒருவர் பாகிஸ்தான் ஒழிக என்று முழங்கினார். ஆனால், அவரையும் அவர்கள் மீண்டும் தாக்கினர்” என்று பாதிக்கப்பட்ட பிலால் அகமது கூறியுள்ளார்.
மேலும், தீபாவளி அன்று அந்நகரில் வேறுசில காஷ்மீரிகளும் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் காஷிமீரிகளை எங்கு கண்டாலும் அவர்களை குறிவைத்து தாக்க ஒரு குழு செயற்பட்டு வருகிறது என்றும் பிலால் அகமது குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரித்து வருவதாக டோராண்டா காவல் நிலைய பொறுப்பதிகாரி ரமேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.