Aran Sei

பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய மாணவர்கள்மீது தேசத் துரோக வழக்கு – 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

த்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதை கொண்டாடியதற்காக கைது செய்யப்பட்ட 3 மாணவர்கள்மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்ட மாணவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் அழைத்து வரும் வழியில் சிலர் பின் தொடர்ந்ததாக, மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள்மீது பதியப்பட்ட தேசத் துரோக வழக்கைத் திரும்ப பெற வேண்டும் என உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

’லண்டன் வருகின்ற கோத்தபாய  இராஜபக்சேவைக் கைது செய்ய வேண்டும்’ – வைகோ வேண்டுகோள்

ஜகதீஸ்புரா காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் மூன்று மாணவர்களையும் உத்திரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாணவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (ஏ) (இரண்டு குழுக்களிடையே பகைமைய வளர்த்தல்), 505 ( பகைமையை வளர்க்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுதல்) 124 ஏ (தேசத் துரோகம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மாணவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷங்களை முழக்கமிட்டபடி, வலது சாரி ஆதரவாளர்கள் மாணவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளனர். சில வழக்கறிஞர்களும் மாணவர்களை பின் தொடரும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியது. இருப்பினும் மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்ததாக ஆக்ரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘பெண் தேர்வர்களின் சட்டையை வெட்டிய அதிகாரிகள்’ – மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மகளிர் ஆணையம்

”வழக்கின் தன்மை கருதி மாணவர்கள் பத்திரமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, திரும்ப அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்ற வளாகத்திலும் மாணவர்கள்பின் தொடரப்பட்டனர். ஆனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை” எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் மாணவர் சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் நசீர் குஹாமி, மனிதாபிமான அடிப்படையில் மாணவர்கள்மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கல்லூரி நிர்வாகம் மாணவர்களை இடைநீக்கம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களை படிப்பில் கவனம் செலுத்துமாறு நாங்கள் அறிவுறுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடிசை மக்களுக்கான தமிழ்நாடு அரசின் கொள்கை வரைவு – நகரத்திலிருந்து வெளியேற்றப்படுவது தொடருமா என சமூகச் செயற்பாட்டாளர்கள் கேள்வி

ஆக்ரா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரும், குற்றம்சாட்டப்பட்ட்ட மாணவர்களின் வழிகாட்டியுமான மன்சூர் வானி, “அவர்கள் இளையவர்கள், அவர்களுக்கு ஆலோசனை தேவை. இது போன்ற நடவடிக்கைகள் அல்ல” என தெரிவித்துள்ளார்.

”நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக மாணவர்கள் சார்பில் நாங்கள் மன்னிப்பு கோரிக் கொள்கிறோம். மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம். அவர்கள்மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வழக்குகள் மாணவர்கள் வாழ்க்கையை பாதித்துவிடும்” என வானி கூறியுள்ளார்.

Source : The New Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்