Aran Sei

காஷ்மீர் பண்டிட்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த பண்டிட்கள் அமைப்பு

காஷ்மீர் பண்டிட்கள் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணைக் கோரும் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காஷ்மீர் பண்டிட்கள் அமைப்பு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

1989-90ஆம் ஆண்டிகளில் காஷ்மிர் பண்டிட்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இது தொடர்பாக விசாரணை நடத்தரூட்ஸ் இன் காஷ்மீர்’ அமைப்பின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்பின் சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பவம் நடைபெற்று 27 ஆண்டுகள் கடந்துவிட்டதால், போதிய ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

காஷ்மீரி பண்டிட்கள் வெளியேற்றப்பட்டபோது ரத யாத்திரை சென்ற அத்வானி; யாத்திரையை ஒருங்கிணைத்த மோடி – ஆதிர் ரஞ்சன் சௌத்ரி விமர்சனம்

“காலப்போக்கில் ஆதாரங்கள் கிடைக்காது என்ற காரணத்தினால், ரிட் மனுக்களை விசாரிக்காமலே நிராகரிப்பது நியாயமில்லைஎன்றுரூட்ஸ் இன் காஷ்மீர்தனது மறுசீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

2007 ஆண்டு ஜப்பான் சாஹூ வெர்சஸ் சந்திர சேகர் மொஹந்தி வழக்கில்ஒரு குற்றம் என்றும் அழியாதுஎன்று உச்ச நீதிமன்றம் கூறியதற்கு முரணாக ரிட் மனு மற்றும் மறுஆய்வு மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்று அந்த மனுவில் தெரிவித்க்கப்பட்டுள்ளது.

Source: The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்