Aran Sei

‘காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதைக் கண்டிக்கிறோம்’ – சஜாத் குல்லுக்கு ஆதரவாக ஒன்றிணையும் ஊடகவியலாளர் அமைப்பு

ரசுக்கு எதிரான செய்திகளைப் பரப்பியதாகக் கூறி கைது செய்யப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் சஜாத் குல்லை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு ஊடகவியலாளர்களின் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜினில் வசிக்கும் சஜாத் குல், உள்ளூர் செய்தித்தாள் மற்றும் அதன் இணையதளத்தில் பயிற்சி நிருபராக பணிபுரிந்து வருகிறார்.

மகாராஷ்ட்ராவில் வெகு வேகமாகப் பரவும் கொரோனா – அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை

“பத்திரிகையாளர்கள் உண்மைகளை செய்திகளாக்கி, அரசு அதிகாரிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, பத்திரிகையாளர்களை கட்டுப்படுத்தும் ஒரு தந்திரமாக இக்கைது உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த மிரட்டல் முறையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களாக இதைப் பார்க்கிறோம்” என்று காஷ்மீர் பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் ஊடகக் கண்காணிப்புக் குழுவும் இளம் பத்திரிகையாளர் சஜாத் குல்லின் கைதை கண்டித்ததோடு, அவரை உடனடியாக விடுதலைச் செய்யக் கோரியுள்ளது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்