Aran Sei

‘நாங்கள் பாலஸ்தீனர்கள்’ : இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 17 காஷ்மீர் இளைஞர்கள் கைது : கண்டனத்தையடுத்து விடுதலை

ஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஓவியர் உட்பட 17 இளைஞர்களை காஷ்மீர் காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (மே 15), பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சுவரோவியம் வரைந்த ஓவியர் முடசிர் குல், ஸ்ரீநகரின் பாட்ஷாஹி பாக் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் தலையில் பாலஸ்தீனிய கொடியை கட்டியிருக்கும்  கண்ணீர் விடும் ஒரு பெண்ணின் படத்தை சுவரோவியமாக வரைந்துள்ள முடசிர் குல், அத்துடன் ‘நாங்கள் பாலஸ்தீனர்கள்’ என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.

காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்வதற்கு முன்னர், அவரின் கையாலேயே  அந்த ஓவியத்தை சேதப்படுத்த வைத்துள்ளனர்.

கட்டடத்தில் இருந்து வெளியேற 10 நிமிடம் அவகாசம் கேட்ட மக்கள் – கோரிக்கை பொருட்படுத்தாது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்

இக்கைது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “பதினேழு இளைஞர்கள் அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

இளைஞர்களின் கைதுக்கு மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி போன்ற காஷ்மீர் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (மே 16), கைது செய்யப்பட்ட ஓவியர் உட்பட 17 இளைஞர்களை காஷ்மீர் காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்