Aran Sei

‘ஆர்டர் செய்த தடுப்பூசிகள் கிடைக்கவில்லை; தடுப்பூசி முகாம்களை மூடுகிறோம்’ – காஷ்மீர், மகாராஷ்ரா அரசுகள் அறிவிப்பு

டந்த சில நாட்களாக மருந்து நிறுவனங்களில் இருந்து தடுப்பூசிகள் வந்து சேராததால், காஷ்மீரில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்திடமிருந்து ஆர்டர் செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் உடனடியாக வந்து சேராவிட்டால், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம்களையும் நடத்த முடியாது என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“இதுநாள் வரை எங்களுக்குக் கிடைக்கப் பெற்ற தடுப்பூசிகள் அனைத்தையும் நாங்கள் செலுத்திவிட்டோம். எங்களிடம் சில ஆயிரம் தடுப்பூசிகளே உள்ளன. இவை ஏப்ரல் 30 மக்களுக்குச் செலுத்தப்பட்டு விட்டன . இன்று  மே 1 தடுப்பூசி முகாம் நடத்த எங்களிடம் எந்த தடுப்பூசிகளும் இல்லை.” என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றம் கட்டுவதை கைவிட்டு தடுப்பூசி கொள்முதல் செய்ய வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி

மேலும், மே 1 ஆம் தேதி  எங்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்காவிட்டால், காஷ்மீர் முழுவதும் தடுப்பூசி முகாமை நிறுத்தி வைப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (மே 1) செய்தியாளர்களை சந்தித்து பேசிய மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார்,  “நாங்கள் இன்று கொரோனா தடுப்பூசி முகாமை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், இன்று 3 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே பெற்றுள்ளோம். அதிலும், 20,000 தடுப்பூசிகளை புனே மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இன்று, 45 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான தடுப்பூசி கையிருப்பு எங்களிடம் இல்லை. அதனால், புனே மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்கள் மூடப்படுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்