ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள் பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகப் பயன்படுத்தப்படும் அளவுக்கு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை மோசமாகி விட்டது என்று ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “எனது அரசு ஸ்ரீநகரில் சமுதாயக் கூடங்கள்/திருமண மண்டபங்கள் கட்டியது. பதுங்கு குழிகளை இடித்தது. நகரின் பாதுகாப்பு நிலைமை தற்போது பின்நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. புதிய பதுங்கு குழிகள் கட்டப்பட்டு வருவதும், திருமண மண்டபங்கள் பாதுகாப்புப் படையினரின் முகாம்களாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுவதும் ஏமாற்றமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
ஸ்ரீநகர் பகுதியில் சில சமுதாய கூடங்களும் திருமண மண்டபங்களும் துணை இராணுவ படைகளில் ஒன்றான, சிஆர்பிஎஃப்பால் கையகப்படுத்தப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து, உமர் அப்துல்லா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியும் இந்த நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மிர் மக்களை மௌனிக்க வைப்பதற்கான ஒரே நோக்கத்துடன் ஒவ்வொரு நாளும் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.