இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சினையையும், முக்கியமாகக் காஷ்மீர் பிரச்சினை பற்றியும் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டு பேசி தீர்க்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பிரச்சினைகளைப் பேசி தீர்க்க முடிந்தால் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இது மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்று இம்ரான் கான் ரஷ்யா டுடே செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
2018 இல் நான் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் இந்தியா அதற்கு முகம் கொடுக்கவில்லை என்று இம்ரான் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெகசிஸ் விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் பிப்.,25 ஆம் நாள் விசாரணை
2019 பிப்ரவரி 26 அன்று புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாக, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயிற்சி முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கிய பின்னர் 2 நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரிய இடைவெளி விழுந்தது. இந்தியாவைத் தாக்கும் தீவிரவாத அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவளிக்கும் வரை பாகிஸ்தானுடன் எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்த முடியாது என இந்தியா கூறி வருகிறது.
2019 ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்களைத் திரும்பப் பெறுவதாகவும் ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாக இந்தியா அறிவித்ததற்குப் பிறகு 2 நாடுகளின் உறவுகளும் மேலும் மோசமடைந்தன.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து வரும் மோதலுக்கு ‘அமைதியான தீர்வு’ கிடைக்கும் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் இராணுவ மோதல்கள் ஒருபோதும் பிரச்சினைகளைத் தீர்க்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
“நான் இராணுவ மோதல்களில் நம்பிக்கை கொண்டவன் அல்ல. நாகரீக சமூகங்கள் உரையாடல்கள் மூலம் பிரச்சனைகளைப் பேசி தீர்த்துக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.
“இந்தியா எங்களுக்கு ஒரு பகை நாடாக மாறியுள்ளது, அதனால் இந்தியாவுடனான வர்த்தகம் குறைந்துவிட்டது. ஆனால் அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் வர்த்தக உறவுகளையும் நாங்கள் விரும்புவதாக” பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.